search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முலாயம் சிங் யாதவ்"

    • முபாரக்பூர் தொகுதியில் (2012, 2017) இரண்டு முறை சட்டமனற உறுப்பினராக ஷா ஆலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • ஷா ஆலம் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி, அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்

    உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்த ஷா ஆலம் அக்கட்சியில் இருந்து விலகி, அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.

    உத்தரபிரதேசத்தில் முபாரக்பூர் தொகுதியில் (2012, 2017) இரண்டு முறை சட்டமனற உறுப்பினராக ஷா ஆலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    2014 மற்றும் 2022 மக்களவை தேர்தல்களில் அசம்கர் தொகுதியில், முறையே சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மற்றும் தர்மேந்திரா யாதவ்க்கு எதிராக ஷா ஆலம் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முலாயம் சிங்கின் மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் 54 சதவீதம் வாக்குகள் பதிவானது.
    • பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 5 சட்டசபை தொகுதிகளிலும் நேற்று இடைத்தேர்தல் நடந்தது.

    புதுடெல்லி:

    சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உத்தர பிரதேசத்தின் மெயின்புரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவரது மறைவால் காலியான அந்த தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. இந்தத் தொகுதியில் 54.37 சதவீத வாக்குகள் பதிவானது. அங்கு சமாஜ்வாடி சார்பில் முலாயமின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் களமிறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல, சமாஜ்வாடி மூத்த தலைவர்களில் ஒருவரான அசம்கானின் தகுதி நீக்கத்தால் காலியான ராம்பூர் சதர் சட்டசபை தொகுதிக்கும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில் மிகவும் குறைவாக வெறும் 34 சதவீத வாக்குகளே பதிவானது. இதில் மக்களை ஜனநாயக கடமை ஆற்ற விடாமல் தடுத்ததாக பா.ஜ.க.வும், சமாஜ்வாடியும் ஒன்றையொன்று குற்றம்சாட்டின.

    மேலும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 5 சட்டசபை தொகுதிகளிலும் நேற்று இடைத்தேர்தல் நடந்தது.

    ஒடிசாவின் பதம்பூரில் 76 சதவீதம், ராஜஸ்தானின் சர்தார்ஷாகரில் 70 சதவீதம், சத்தீஸ்கரின் பனுபிரதாப்பரில் 64.86 சதவீதமும், உத்தர பிரதேசத்தின் கதாலியில் 56.46 சதவீதமும், பீகாரின் குரானியில் 57.9 சதவீதமும் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பிற்பகல் 3 மணியளவில் முலாயம் சிங் யாதவின் இறுதி சடங்கு சொந்த ஊரிலேயே நடைபெற்றது.
    • பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

    உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரியும், சமாஜ்வாடி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக அரியானா குருகிராமில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று காலை மரணம் அடைந்தார்.

    இதையடுத்து முலாயம் சிங் யாதவ் உடல் மருத்துவமனையில் இருந்து சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலம் எடாவா மாவட்டம் சைபைக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முலாயம் சிங் யாதவ் மறைவை கேள்விப்பட்டதும் மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான சமாஜ் வாடி கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சைபை கிராமத்தில் திரண்டனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்து முலாயம் சிங் யாதவ் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விடிய விடிய காத்திருந்து அவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். சிலர் துக்கம் தாங்காமல் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

    இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் முலாயம் சிங் யாதவின் இறுதி சடங்கு சொந்த ஊரிலேயே நடைபெற்றது. பின்னர், அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லபட்டு முழு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

    இறுதிச் சடங்கில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகல், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், அவரது தயாரும் சமாஜவாதி எம்.பி.யுமான ஜெயா பச்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • முலாயம் சிங் யாதவ் மறைவை கேள்விப்பட்டதும் மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் திரண்டனர்.
    • பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

    உடல் நலக்குறைவு காரணமாக அரியானா குருகிராமில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரியும், சமாஜ்வாடி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் நேற்று காலை மரணம் அடைந்தார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று முலாயம் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    இதை கேள்விப்பட்ட உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மருத்துவமனைக்கு சென்று முலாயம் சிங் யாதவ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்த அவரது மகனும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து முலாயம் சிங் யாதவ் உடல் மருத்துவமனையில் இருந்து சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலம் எடாவா மாவட்டம் சைபைக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முலாயம் சிங் யாதவ் மறைவை கேள்விப்பட்டதும் மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான சமாஜ் வாடி கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சைபை கிராமத்தில் திரண்டனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்து முலாயம் சிங் யாதவ் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விடிய விடிய காத்திருந்து அவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். சிலர் துக்கம் தாங்காமல் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

    இன்று பிற்பகல் 3 மணிக்கு முலாயம் சிங் யாதவின் இறுதி சடங்கு சொந்த ஊரிலேயே நடக்கிறது. அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லபட்டு முழு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்படுகிறது.

    அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ்பாகல் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா ஆகியோரும் பங்கேற்றனர்.

    இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வருகின்றனர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் அங்கு போடப்பட்டு உள்ளது.

    • முலாயம் சிங் மறைவையொட்டி உத்தரபிரதேச மாநிலத்தில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
    • முலாயம் சிங் யாதவின் இறுதி சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்து உள்ளார்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.

    முலாயம் சிங் யாதவுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி அருகே குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்டு மாதம் அனுமதிக்கப்பட்டார்.

    கடந்த 1-ந்தேதி இரவு அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு உயிர் காக்கும் மருந்துகளுடன் டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை 8.16 மணிக்கு அவர் மரணம் அடைந்தார். மத்திய மந்திரி அமித்ஷா, மருத்துவமனைக்கு சென்று முலாயம் சிங் யாதவ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    அவரது உடல் மருத்துவமனையில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சொந்த ஊரான சைபாய் கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது. நாளை (11-ந்தேதி) பிற்பகல் 3 மணியளவில் இறுதி சடங்கு நடக்கிறது. அதன்பிறகு அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

    முலாயம் சிங் மறைவையொட்டி உத்தரபிரதேச மாநிலத்தில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்து உள்ளார். மேலும் முலாயம் சிங் யாதவின் இறுதி சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் அவர் அறிவித்து உள்ளார்.

    முலாயம் சிங் யாதவ் கடந்த 1939-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா அருகே சைபாய் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தார். மல்யுத்த வீரரான அவர் 1967-ம் ஆண்டு ராம் மனோகர் லோகியாவின் சன்யுக்த் சோசலிஸ்ட் கட்சி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். 1968-ம் ஆண்டு பாரதிய கிராந்தி தளம் கட்சியில் இணைந்தார்.

    அதன்பிறகு பல்வேறு கட்சிகளில் இணைந்த அவர் பின்னர் ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். 1977-ம் ஆண்டு முதல் முறையாக அமைச்சர் ஆனார். 1985-ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டு வரை ஜனதாதளம் கட்சியின் மாநில தலைவராக இருந்தார். அவர் கடந்த 1992-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ் வாடி கட்சியை தொடங்கினார். அவரது கட்சி தேர்தலில் போட்டியிட்டு பலமுறை வெற்றி பெற்று உள்ளது.

    ஆனால் அவர் கட்சி தொடங்கும் முன்பே சந்திரசேகரின் ஜனதா தளம் கட்சியில் இருந்தபோது காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் முதல் முறையாக 1989-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்-மந்திரி ஆனார்.

    ஆனால் 1991-ம் ஆண்டு காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் அவரது அரசு கவிழ்ந்தது.

    அதன் பிறகு தனிக்கட்சி தொடங்கிய பிறகு 1993-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்று 2-வது முறையாக உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி ஆனார். பின்னர் 2003-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 3-வது முறையாக முதல்-மந்திரி ஆனார். அவர் 3 முறை முதல்-மந்திரி பதவியை வகித்துள்ளார். மேலும் 10 முறை எம்.எல்.ஏ.வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    தேவேகவுடா, ஐ.கே. குஜ்ரால் ஆகியோரின் மந்திரி சபையில் முலாயம் சிங் யாதவ் பாதுகாப்புத்துறை மந்திரியாகவும் பதவி வகித்தார். மைன்புரி, அசம்கர் தொகுதிகளில் 7 முறை எம்.பி.யாகவும் பதவி வகித்து உள்ளார். முலாயம் சிங்குக்கு ஒரு முறை பிரதமராகும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், அது கடைசி நேரத்தில் கைநழுவி போனது.

    முலாயம் சிங்கை அவரது ஆதரவாளர்கள் நேதாஜி என்று அன்போடு அழைத்தனர்.

    முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் ஏற்கனவே உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார். தற்போது அவர் சமாஜ் வாடி கட்சியின் தலைவராக இருக்கிறார்.

    முலாயம் சிங் யாதவ் மறைவையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் இரங்கல் செய்தியில், "முலாயம் சிங் யாதவின் மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். சாதாரண சூழலில் இருந்து வந்த முலாயம் சிங் யாதவின் சாதனைகள் அசாதரணமானவை" என்று கூறி உள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து விடா முயற்சியுடன் சேவை செய்தவர் முலாயம் சிங் யாதவ். உத்தரபிரதேச அரசியலில் தனித்துவம் மிக்கவராக திகழ்ந்த முலாயம் சிங் யாதவ் எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தின் முக்கிய வீரராக இருந்தார். பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்த போது வலிமையான இந்தியாவுக்காக உழைத்தார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதேபோல் முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு மத்திய மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    • உடல்நிலை மோசமடைந்ததால் கடந்த 2ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்
    • மூச்சுவிட முடியாததால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது

    புதுடெல்லி:

    சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான முலாயம் சிங் யாதவ் (வயது 82), பல்வேறு உடல்நலக்கோளாறுகள் காரணமாக டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

    நுரையீரல் தொற்று தீவிரமடைந்ததையடுத்து, அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதனால் அவரை கடந்த 2ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி, சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், முலாயம் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், மூச்சுவிட முடியாததால் அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் வழங்கப்படுவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனால் கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர். அவர் நலம்பெற பிரார்த்தனை செய்தவண்ணம் உள்ளனர்.

    82 வயது நிரம்பிய முலாயம் சிங் யாதவ் உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் ராணுவ மந்திரியாகவும் பணியாற்றி உள்ளார். உத்தர பிரதேச சட்டசபைக்கு 10 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர். தற்போது மெயின்புரி மக்களவை தொகுதி எம்.பி.யாக உள்ளார். 

    • குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளார்.
    • முலாயம் சிங் யாதவுக்கு விரிவான நிபுணர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.

    சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இன்று குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    82 வயதான முலாயம் சிங் யாதவ் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டார். நேற்று வரை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். இந்நிலையில், ஐசியுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து மருத்துவமனை மற்றும் சமாஜ்வாடி கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், "முலாயம் சிங் யாதவ் இன்னும் கவலைக்கிடமாக இருக்கிறார். அவர் மேதாந்தா மருத்துவமனையின் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு விரிவான நிபுணர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.

    அவர் விரைவில் குணமடைந்து நீண்ட ஆயுளுடன் வாழ நாம் அனைவரும் பிரார்த்திப்போம்" என்று குறிப்பிட்டிருந்தது.

    • நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர், முலாயம் சிங் யாதவ்
    • பல்வேறு உடல்நலக்கோளாறுகளால் முலாயம்சிங் யாதவ் அவதிப்பட்டு வந்தார்.

    குருகிராம் :

    நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர், முலாயம் சிங் யாதவ் (வயது 82). சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரான இவர் மத்திய ராணுவ மந்திரியாகவும் பதவி வகித்தவர். தற்போது நாடாளுமன்ற மக்களவை எம்.பி.யாக உள்ளார்.

    பல்வேறு உடல்நலக்கோளாறுகளால் அவர் அவதிப்பட்டு வந்தார்.

    கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி முதல் டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள மேதாந்தா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நுரையீரல் தொற்றினால் அவதிப்படுகிற அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி, அவரது உயிரைக்காப்பாற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் டாக்டர் நிதின் சூத், சுஷில் கட்டாரியா தலைமையில் டாக்டர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள்.

    முலாயம் சிங் யாதவுடன் அவரது சகோதரர் சிவபால் சிங் யாதவ் உடனிருந்து கவனித்து வருகிறார்.

    தந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை அறிந்து, அவரது மகனும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ், குடும்பத்தினருடன் குருகிராம் விரைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    இதையொட்டி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "முலாயம் சிங் யாதவின் உடல்நிலை மிக மோசமாகி இருப்பது அறிந்து நாங்கள் அனைவரும் கவலை அடைந்துள்ளோம். அவர் நலம்பெற பிரார்த்திக்கிறோம்" என கூறி உள்ளார்.

    • உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்மந்திரி முலாயம் சிங் யாதவ் ஐ.சி.யூ.வில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
    • முலாயம் சிங் உடல்நிலை குறித்து அகிலேஷிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி.

    புதுடெல்லி:

    உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல் மந்திரியும், சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவுக்கு இன்று திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இதற்கிடையே, முலாயம் சிங் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த சூழலில், ஐ.சி.யூ.வில் சேர்த்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மருத்துவமனைக்கு வரவேண்டாம் என கட்சி கேட்டு கொண்டுள்ளது.

    இந்நிலையில், முலாயமின் மகன் அகிலேஷ் யாதவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி முலாயம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

    உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர்களான முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரும் தாங்கள் வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்ய கால அவகாசம் வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசத்தில் கடந்த சமாஜ்வாதி கட்சி ஆட்சியின் போது முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களா உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை கடந்த 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. இதனை அடுத்து, முன்னாள் முதல்வர்கள் 15 நாட்களில் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியது.

    முன்னாள் முதல்வர் மாயாவதி அரசு பங்களாவை காலி செய்து தனது கட்சிக்கு சொந்தமான பங்களாவுக்கு குடியேற உள்ளார். ஆனால், முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரும் அரசு பங்களாவை காலி செய்ய மறுக்கின்றனர்.

    பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மற்றொரு வீடு கிடைப்பது கடினம் என்பதால் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு இருவரும் கடிதம் எழுதியிருந்தனர். ஆனால், மாநில அரசு அதற்கு பதிலளிக்காத நிலையில், இன்று இருவரும் இதே கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.  
    ×