search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம் சிங் யாதவ் கவலைக்கிடம்
    X

    ஆஸ்பத்திரியில் முலாயம்சிங் யாதவ் சிகிச்சை பெற்ற காட்சி.

    உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம் சிங் யாதவ் கவலைக்கிடம்

    • நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர், முலாயம் சிங் யாதவ்
    • பல்வேறு உடல்நலக்கோளாறுகளால் முலாயம்சிங் யாதவ் அவதிப்பட்டு வந்தார்.

    குருகிராம் :

    நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர், முலாயம் சிங் யாதவ் (வயது 82). சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரான இவர் மத்திய ராணுவ மந்திரியாகவும் பதவி வகித்தவர். தற்போது நாடாளுமன்ற மக்களவை எம்.பி.யாக உள்ளார்.

    பல்வேறு உடல்நலக்கோளாறுகளால் அவர் அவதிப்பட்டு வந்தார்.

    கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி முதல் டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள மேதாந்தா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நுரையீரல் தொற்றினால் அவதிப்படுகிற அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி, அவரது உயிரைக்காப்பாற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் டாக்டர் நிதின் சூத், சுஷில் கட்டாரியா தலைமையில் டாக்டர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள்.

    முலாயம் சிங் யாதவுடன் அவரது சகோதரர் சிவபால் சிங் யாதவ் உடனிருந்து கவனித்து வருகிறார்.

    தந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை அறிந்து, அவரது மகனும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ், குடும்பத்தினருடன் குருகிராம் விரைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    இதையொட்டி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "முலாயம் சிங் யாதவின் உடல்நிலை மிக மோசமாகி இருப்பது அறிந்து நாங்கள் அனைவரும் கவலை அடைந்துள்ளோம். அவர் நலம்பெற பிரார்த்திக்கிறோம்" என கூறி உள்ளார்.

    Next Story
    ×