என் மலர்
இந்தியா

பிரதமர் மோடி
முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி - அகிலேஷிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி
- உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்மந்திரி முலாயம் சிங் யாதவ் ஐ.சி.யூ.வில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
- முலாயம் சிங் உடல்நிலை குறித்து அகிலேஷிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி.
புதுடெல்லி:
உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல் மந்திரியும், சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவுக்கு இன்று திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதற்கிடையே, முலாயம் சிங் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த சூழலில், ஐ.சி.யூ.வில் சேர்த்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மருத்துவமனைக்கு வரவேண்டாம் என கட்சி கேட்டு கொண்டுள்ளது.
இந்நிலையில், முலாயமின் மகன் அகிலேஷ் யாதவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி முலாயம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
Next Story






