முலாயம் சிங் யாதவ் தொடர்ந்து கவலைக்கிடம்- ஐசியுவில் தீவிர சிகிச்சை

குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளார்.முலாயம் சிங் யாதவுக்கு விரிவான நிபுணர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.
முலாயம் சிங் யாதவ் தொடர்ந்து கவலைக்கிடம்- ஐசியுவில் தீவிர சிகிச்சை
Published on

சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இன்று குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

82 வயதான முலாயம் சிங் யாதவ் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டார். நேற்று வரை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். இந்நிலையில், ஐசியுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனை மற்றும் சமாஜ்வாடி கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், "முலாயம் சிங் யாதவ் இன்னும் கவலைக்கிடமாக இருக்கிறார். அவர் மேதாந்தா மருத்துவமனையின் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு விரிவான நிபுணர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.

அவர் விரைவில் குணமடைந்து நீண்ட ஆயுளுடன் வாழ நாம் அனைவரும் பிரார்த்திப்போம்" என்று குறிப்பிட்டிருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com