செய்திகள்

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு அவசரம் காட்டியிருக்க வேண்டாம்- இந்திய கம்யூனிஸ்டு குற்றச்சாட்டு

Published On 2018-11-29 05:36 GMT   |   Update On 2018-11-29 05:36 GMT
சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு அவசரம் காட்டியிருக்க வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கண்ணம் ராஜேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார். #Sabarimala #CPI
திருவனந்தபுரம்:

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு உள்பட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் சபரிமலையில் இளம்பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கும் விவகாரத்தில் பினராயி விஜயன் மீது கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கண்ணம் ராஜேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும் போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த முதல்வர் அவசரம் காட்டி இருக்க வேண்டாம். அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி இது தொடர்பாக ஒரு சமாதான முடிவை எடுத்து இருக்கலாம்.

இதன் மூலம் இந்த பிரச்சனையை அமைதியாக, பொறுமையாக கையாண்டு இருக்கலாம் என்பது எங்கள் கருத்து. ஆனாலும் ஆளும் கட்சிக்கு நாங்கள் அளித்து வரும் ஆதரவில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.  #Sabarimala #CPI
Tags:    

Similar News