என் மலர்

  நீங்கள் தேடியது "Sabarimala"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 30-ந் தேதி வரை 8 லட்சத்து 79 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு.
  • நவம்பர் இறுதிக்குள் 10 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய வாய்ப்பு.

  சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மண்டல,மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 12 நாட்களில் மட்டும் சபரிமலையில் ரூ.52.55 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

  அப்பம் மூலம் ரூ.2.58 கோடியும், அரவணை மூலம் ரூ.23.57 கோடியும், காணிக்கையாக ரூ.12.73 கோடியும் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்த கோபன் தெரிவித்துள்ளார். வருகிற 30-ந் தேதி வரை சபரிமலை தரிசனத்திற்கு 8 லட்சத்து 79 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடி முன்பதிவையும் சேர்த்தால் நவம்பர் மாத இறுதிக்குள் 10 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சபரிமலை வரும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்துள்ளது.
  • கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் உரிய விலையில் விற்கப்படுகின்றனவா? தரமாக உள்ளதா? என அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

  திருவனந்தபுரம்:

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

  கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட பிறகு மண்டல பூஜை இந்த ஆண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டதால் பக்தர்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. நாளுக்கு நாள் சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

  ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு போன்றவற்றின் மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் சரியான நேரத்திற்கு வந்தால் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

  ஆனாலும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் சூழ்நிலையே அங்கு உள்ளது. இதற்கு காரணம் பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பது தான். பக்தர்களின் வசதிக்காக கோவில் நடை திறப்பு நேரத்திலும் தேவஸ்தானம் மாற்றம் செய்துள்ளது.

  ஆனாலும் பக்தர்களின் காத்திருப்பு தொடரவே செய்கிறது. காலை 4 மணிக்கு திறக்கப்பட்டு வந்த நடை, 3 மணிக்கே தற்போது திறக்கப்படுகிறது. அதேபோல் மாலையிலும் நடை திறப்பு 4 மணியில் இருந்து 3 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

  சபரிமலைக்கு வழக்கமான நாட்களை விட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. நேற்று சபரிமலையில் தரிசனத்திற்காக 87 ஆயிரத்து 491 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இவர்களில் 85 ஆயிரம் பேர் நேற்று ஒரே நாளில் இரவு வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.

  இன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதலே அதிகமாக காணப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களை தவிர, வெளி மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் உடனடி முன்பதிவில் பதிவு செய்ய ஆர்வம் காட்டினர். இதனால் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

  சபரிமலை வரும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்துள்ளது. கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் உரிய விலையில் விற்கப்படுகின்றனவா? தரமாக உள்ளதா? என அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

  சபரிமலை காட்டுப்பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமிராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விரத காலத்தில் உபவாசம் இருக்க வேண்டும்.
  • விரதகாலத்தில் அதிகாலையிலும் மாலையிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

  சபரிமலையில் குடிகொண்டுள்ள ஸ்ரீஐயப்பனை தரிசனம் செய்யச் செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி மனது, உடல் ஆகிய இரண்டையும் தூய்மையாக்கி ஐயப்பனை நினைத்து மாலை அணிந்து விரதம் தொடங்கி விடுவார்கள்.

  இவ்வாறு விரதம் மேற்கொள்ளுபவர்கள் விரதகாலத்தில் அதிகாலையிலும் மாலையிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இதனால் உடலும் மனமும் மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். விபூதி, சந்தனம் குங்குமம் போன்றவை தரித்து பூஜைகள் செய்து அவரவர் வசதிக்கு ஏற்ப 108 அல்லது 1008 சரணகோஷங்கள் முழங்க வேண்டும்.

  விரதகாலம் முழுமையும் ஒருவேளை அளவோடு சைவ உணவருந்தி இரவில் பழம், பால் போன்ற எளிமையான ஆகாரங்கள் உட்கொண்டு உபவாசம் இருக்க வேண்டும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் விரதகாலங்களில் கருப்பு, நீலம் ஆரஞ்சு, காவி போன்ற நிறங்களில் உள்ள வேஷ்டிகளையே அணிதல் வேண்டும்.

  விரதத்தின்போது வீட்டு விலக்கான பெண்களின் அருகாமையைத் தவிர்க்க வேண்டும். விரதம் இருக்கும்போது மது, சிகரெட், போன்ற போதை வஸ்துகளைப் பயன்படுத்தக்கூடாது.

  சபரிமலை செல்லும் பக்தர்கள் முக்கியமாகக் கடைபிடிக்க வேண்டிய விரதம் பிரம்மச்சர்ய விரதம். மாலை போட்டிருக்கும்போது பகல் நேரத்தில் உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். இரவில் தூங்கும்போது தலையணை, மெத்தை போன்றவற்றைத் தவிர்த்து தரையில் வெறும் துண்டு அல்லது எதுவும் விரிக்காமல் படுத்து உறங்க வேண்டும் என்பது ஐதீகம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பக்தர்கள் முக கவசம் அணிய தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.
  • பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் சபரிமலைக்கு பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது.

  தற்போது மண்டல பூஜைக்காக கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு உள்ளது. அதே சமயத்தில் ஆன்லைன் முன்பதிவு முறையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் நேரடியாக வரும் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு செய்யும் வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.

  சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் தினமும் 8 மணி முதல் 10 மணி நேரம் வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

  இதனால் பக்தர்களின் வசதிக்காக தரிசன நேரம் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. அதாவது மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பிறகு மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வந்தது. அதனை முன்கூட்டியே 3 மணிக்கு திறந்து தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

  நடை திறக்கப்பட்ட நாள் முதல் நேற்றுமுன்தினம் வரை 3 லட்சத்து 84 ஆயிரத்து 106 பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்துள்ளனர். இவை தவிர உடனடி தரிசன முன்பதிவு மூலமாகவும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

  இந்தநிலையில் வருகிற 30-ந் தேதி வரை சபரிமலை தரிசனத்திற்கு 8 லட்சத்து 79 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. உடனடி முன்பதிவையும் சேர்த்தால் நவம்பர் மாத இறுதிக்குள் 10 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 1.20 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய முடியும். இதனால் வருகிற நாட்களில் மேலும் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவை மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது.

  இதற்கிடையே தொற்று நோய் பரவுவதை தடுக்க சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இருமுடி இல்லாமல் 18 படி ஏறக்கூடாது.
  • மாலைகள் இருமுடி பைகள் ஆகியவையும் கடைகளில் கிடைக்கிறது.

  ஐயப்பனின் யாத்திரையில் இருமுடி கட்டி யாத்திரை தொடங்கி சென்று 18 படி ஏறுதல் என்பது தான் முக்கியச் சடங்காகும். இருமுடி இல்லாமல் 18 படி ஏறக்கூடாது. இருமுடியுடன் செல்பவர்களுக்கு தான் ஐயப்பனின் முழுமையான அனுக்கிரகம் கிடைக்கும். இருமுடிபை பச்சை, நீலம், கருப்பு ஏதாவது ஒரு நிறத்தில் இருக்கலாம், 3 அடி 1 அடி (அங்குலம்) அகலம் உள்ள துணிபை கடையில் விற்கிறார்கள் இதன் ஒரு மூலையில் இரு துணிகாது வைத்து அதில் 2 மீட்டர் நீளம் உள்ள நூற்கயிறு கட்டப்படும். இத்துடன் 8 இஞ்ச் நீளம், 5 இஞ்ச் அகலம் உள்ள இரண்டு துணிப்பபைகளும் நூல் கயிறு இணைத்து இருமுடி பை இருக்க வேண்டும்.

  இந்தப் கயிறு இணைத்து இருமுடி பை இருக்க வேண்டும். இந்தப் பைகளை இருமுடி கட்டும் அன்று கொண்டு வர வேண்டும். இருமுடியை முன்முடி பின்முடி என இரு பிரிவாக பிரித்து இரு முடிக்கட்டு கட்டுவார்கள். முன்முடி ஐயப்பனுக்கு பூஜைக் குரியது. பின்முடி சமையல் செய்வதற்கான சாமான்கள் வைக்கப்படுகிறது.

  முன்முடியில் 1) மஞ்சள் தூள் 2) மஞ்சள் 3) பன்னீர் 4) தேன் 5) சந்தன வில்லைகள் 6) குங்குமம் 7) விபூதி 8) ஊதுபத்தி 9) சாம்பிராணி 10) கற்பூரம் 11) பேரீட்சை 12) உலர்ந்த திராட்சை 13) முந்திரி 14) டைமன் கல்கண்டு 15) அச்சு வெல்லம் 16) அவல் 17) அவல்பொறி 18) மிளகு 19) கல் உப்பு 20) எலுமிச்சம் பழம் 21) வெற்றிலைபாக்கு 22) பாசிப் பருப்பு 23) சுக்கு 24) ஏலக்காய் 25) காணிப்பொன் 26) கருப்பு வளையல் 27) திரிநூல் 28) முத்திரை தேங்காய் ஒன்று 29) சிறிய தேங்காய் மூன்று 30) பச்சரிசி 31) பசு நெய்.

  தற்சமயம் கடைத்தெருவில் பூஜை சாமான்கள் கடைகளில் நமக்கு வேண்டியதற்கு ஏற்ப முன்முடி சாமான்களை பாக்கெட்டுகளில் போட்டு, தயாராக ரூ. 15 முதல் ரூ. 30 வரை ஒரு பாக்கெட் என விற்கிறார்கள். மாலைகள் இருமுடி பைகள் ஆகியவையும் கடைகளில் கிடைக்கிறது.

  மிகவும் ஆசார முறைப்படி பழைய சபரிமலை பயண வழிகளைக் கடைப்பிடிக்கும் குருசாமிகள் பெருவழிப்பாதையில் தாங்களே சமையல் செய்து அதற்கான பாத்திரங்களையும், மளிகை சாமான்களை யும் பயணம் வரும் சுவாமிகள் மூலம் கொண்டு செல்வர். அத்தகைய முறையில் சமையலுக்கு வேண்டிய மளிகை சாமான்கள் கொண்ட இரு முடிகளை ஒவ்வொரு இரு முடிக்கும் எண்கள் கொடுக்கப்பட்டால் அந்தந்த இருமுடியைப் பார்த்து எடுப்பது சுலபம். அவற்றை பின்முடியில் சுமக்கக் கூடிய அளவில் பிரித்து வைப்பார்கள். ஆனால் தற்சமயம் காட்டுவழியில் சமையல் செய்வது பெருமளவு குறைந்து விட்ட நிலையில் முன் முடி சாமான்களையே பிரித்து பின் முடியில் வைத்து விடுகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஐயப்ப சுவாமியின் அஞ்சல் குறியீட்டு எண் கொண்ட சபரிமலை சந்நிதான அஞ்சல் அலுவலகம், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் மட்டுமே இயங்கும்.
  • பூஜைக்காலமான மண்டல மகர லக்னத்தில் மட்டுமே இந்த தபால் அலுவலகம் செயல்படும். 62 நாட்களுக்குப் பின் அஞ்சல் குறியீடு எண் செயலிழப்பு செய்யப்படும்.

  நம் நாட்டில், இரண்டு பேருக்கு மட்டுமே சொந்த அஞ்சல் குறியீடு (பின் கோடு) உள்ளது. அதில் ஒருவர் குடியரசுத் தலைவர். மற்றொருவர் சபரிமலை ஐயப்பன் என்றால் அது எல்லோரையும் விழியுயர்த்தி ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம் தான்.

  குடியரசுத் தலைவரின் ராஷ்டிரபதி பவன் அஞ்சல் குறியீட்டு எண்: 110004.(ஆண்டு முழுவதும்)

  சபரிமலை ஐயப்ப சுவாமி சந்நிதானத்தின் அஞ்சல் குறியீட்டு எண்: 689713 ( அறுபத்திரண்டு நாள்களுக்கு மட்டும்) இந்த அஞ்சல் குறியீட்டு எண்ணில் தற்போது சபரிமலை சந்நிதான அஞ்சல் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அஞ்சல் அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் அஞ்சல் முத்திரையில் சபரிமலையின் 18-ஆம் படி மற்றும் ஐயப்பன் சிலை உலோகத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

  நமது நாட்டில் வேறு எந்த அஞ்சல் அலுவலகமும் இதுபோன்ற தனி அஞ்சல் முத்திரைகளைப் பயன்படுத்துவதில்லை. பயன்படுத்த இந்திய அஞ்சல் துறையும் அனுமதிப்பதில்லை.

  ஐயப்ப சுவாமியின் அஞ்சல் குறியீட்டு எண் கொண்ட சபரிமலை சந்நிதான அஞ்சல் அலுவலகம், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் மட்டுமே இயங்கும். பூஜைக்காலமான மண்டல மகர லக்னத்தில் மட்டுமே இந்த தபால் அலுவலகம் செயல்படும். 62 நாட்களுக்குப் பின் அஞ்சல் குறியீடு எண் செயலிழப்பு செய்யப்படும்.

  இத்தனை சிறப்பு பெற்ற சபரிமலை சன்னிதானம் தபால் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து, இந்த 18 ஆம் படி மற்றும் ஐயப்பன் முத்திரையிடப்பட்ட அஞ்சல் உறைகளை வாங்கி தங்கள் வீடுகளுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் கடிதங்களாக அனுப்புகின்றனர். பத்திரப்படுத்தவும் செய்கின்றனர்.

  மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலம் முடிந்ததும் இந்த சிறப்பு உலோக அஞ்சல் முத்திரை பத்தனம்திட்டா அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலக பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்படும். தொடர்ந்து அடுத்த மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலத்தில் மீண்டும் பயன்படுத்தப்படும்.

  ஐயப்ப சுவாமிக்குப் பக்தர்கள் எழுதும் ஏராளமான கடிதங்கள் இந்த அஞ்சல் அலுவலகத்திற்கு வருகின்றன. சந்தோஷம், சோகம், துக்கம், தீராத பிரச்னைகள், கவலைகள், காதல் என பல்வேறு உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் கடிதங்கள் உலகின் பல்வேறு மூலைகளில் இருந்தும் இந்த சந்நிதான அஞ்சல் அலுவகத்திற்கு வருகின்றன. ஐயப்பன் பெயரில் காணிக்கையாக பணவிடைகளும் இந்த அஞ்சல் அலுவகத்திற்கு வந்து கொட்டுகின்றன.

  வீட்டில் நடக்கும் பல்வேறு வைபோகங்கள், விசேஷங்களுக்கு ஐயப்பனை அழைக்கும் முதல் அழைப்பிதழும் இங்கு வருகின்றன.

  இந்தக் கடிதங்கள் அனைத்தும் சன்னிதானத்தில் ஐயப்பனிடம் அளித்து நிவர்த்திக்காகவும், வாழ்த்துக்களுக்காகவும் பூஜிக்கப்படுகிறது.

  -வீரமணி வீராசாமி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இருமுடி கட்டும் தினத்தன்று குருசுவாமி நெய் தேங்காயை வைத்துப் பூஜை செய்வார்.
  • நெய் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்த பின் பிரசாதமாக கொடுக்கப்படும்.

  ஐயப்பனை வழிபட கொண்டு செல்லும் தேங்காயின் ஒரு கண்ணில் துவாரம் போட்டு அதன் மூலம் இளநீரை அகற்றி காயவைக்க வேண்டும். இருமுடி கட்டும் தினத்தன்று குருசுவாமி இந்த தேங்காயை வைத்துப் பூஜை செய்வார்.

  பின்பு அவர் ஒவ்வொரு ஐயப்பனையும் கூப்பிடு வார். "ஐயப்பன்மார்" அத்தேங்காயைப் பிடித்துக் கொண்டிருக்க அத்துவாரத்தின் வழியே சுத்தமாகக் காய்ச்சிய பசும் நெய்யை "சுவாமியே சரணம் ஐயப்பா" என்று கூறிக்கொண்டே விடுவார். மலைக்குச் செல்லுபவர் தாய், தந்தை மற்றும் உறவினர்களும் இதில் ஆளுக்குக்கொஞ்சம் நெய் விடலாம்.

  அத்தேங்காய் நிரம்பியதும் கார்க்போட்டு அடைத்து எல்லா நெய்த் தேங்காய்களையும் வைத்து பூஜை நடைபெறும். தேங்காய் மேல் ஓடுதான் நம் உடம்பு, அதில் விடப்படும் நெய் நம் உடலிலுள்ள உயிர். இந்த உயிரான நெய்யை பத்திரமாக எடுத்துச் சென்று அய்யனின் காலடியில் சமர்ப்பித்து முழு சரண் அடைந்து விட்டோம் என்பது இதிலுள்ள தத்துவம், நெய் அபிஷேகம் முடிந்த பின் அந்த தேங்காயை கணபதி சன்னதி எதிரில் கொழுந்துவிட்டு எரியும் ஹோம குண்டத்தில் எறிவார்கள்.

  அதாவது நம்முடைய உயிரை அந்த இறைவனுக்கும் உடலை நெருப்புக்கும் அர்ப்பணிக்கும் தத்துவம் தான் இதில் அடங்கியுள்ளது. இந்த நெய் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்த பின் பிரசாதமாக கொடுக்கப்படும். இதற்கு ஈடு இணையுள்ள மருந்து எதுவுமே இல்லை. எப்படிப்பட்ட வியாதியோ அல்லது கெடுதலோ இருந்தாலும் ஐயப்பன் பெயரைச் சொல்லி இதை உட்கொண்டால் அவை எல்லாம் குணமாகி விடும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரெயிலில் தூங்கும் வசதி, 3-வது மற்றும் 2-வது ஏசி, முன்பதிவில்லா பெட்டிகள் என மொத்தம் 14 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
  • சபரிமலை சிறப்பு ரெயிலுக்கு புனலூர் ரெயில் நிலையத்தில் இருந்து கேரள அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

  நெல்லை:

  சென்னை மாநகர் மற்றும் தமிழக டெல்டா மாவட்ட ஐய்யப்ப பக்தர்களுக்கு வசதியாக ஐய்யப்பன் கோவிலின் மிக அருகாமையில் உள்ள சபரிமலை நுழைவாயிலான புனலூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கவேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

  இதையடுத்து அகல ரெயில் பாதை மாற்றத்திற்கு பிறகு முதன்முறையாக தாம்பரத்தில் இருந்து விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், கோட்டயம் வழியாக எர்ணாகுளம் வரை சிறப்பு ரெயிலை இயக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்தது.

  அதன்படி வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி வரை திங்கட்கிழமை தோறும் எர்ணாகுளத்திலிருந்தும், செவ்வாய்க்கிழமை தோறும் தாம்பரத்திலிருந்தும் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.

  மொத்தம் 6 முறை இயக்கப்பட உள்ள இந்த ரெயிலில் தூங்கும் வசதி, 3-வது மற்றும் 2-வது ஏசி, முன்பதிவில்லா பெட்டிகள் என மொத்தம் 14 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இந்த சபரிமலை சிறப்பு ரெயிலுக்கு புனலூர் ரெயில் நிலையத்தில் இருந்து கேரள அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. 100 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய சபரிமலை ரெயில் வழிப்பாதையான செங்கோட்டை-புனலூர்-கொல்லம் ரெயில் வழித்தடத்தை பயன்படுத்தி ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா ஆகிய ஐய்யப்ப திருத்தலங்களுக்கும் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி யாத்திரை செல்லலாம் என்பதால் ரெயில் பயணிகள் சங்கத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சபரிமலை நடை கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டது.
  • பக்தர்கள் நிலக்கல் பகுதியில் ஓய்வெடுத்து மலை ஏறுவது நல்லது.

  கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.

  கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை காரணமாக கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் சபரிமலை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

  தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் 18-ம் படி ஏற பல மணிநேரம் காத்திருக்கிறார்கள்.

  மண்டல பூஜைக்காக சபரிமலை நடை கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டது. 17-ந்தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் உடனுக்குடன் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

  நடை திறந்து ஒரு வாரம் ஆன நிலையில் இதுவரை சுமார் 3 லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை சனி, ஞாயிறு தினங்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்ப்பதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

  இதற்கிடையே கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்பது பற்றி தேவஸ்தான மந்திரி மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

  அப்பம், அரவணை உள்ளிட்ட பிரசாதங்கள் பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  வெளிமாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து வருவதால் அவர்கள் நிலக்கல் பகுதியில் ஓய்வெடுத்து செல்வது நல்லது என கேரள சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

  ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் நிலக்கல் பகுதியில் சுமார் 2 அல்லது 3 மணி நேரம் ஓய்வெடுத்து மலை ஏறுவது நல்லது. அதனை அவர்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஐயப்பன் மனித வாழ்வைத் துறந்து சபரிமலையில் ஐக்கியமானார்.
  • வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னர் ஐயப்பனை காண அடிக்கடி செல்வார்.

  சபரிமலை ஐயப்பன் மனித வாழ்வைத் துறந்து சபரிமலையில் ஐக்கியமானார். அவரைக்காண வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னர் அடிக்கடி செல்வார்.

  செல்லும் பாதை படுமோசமாக இருக்கும். அவரது இருப்பிடத்தை அடைய பல நாட்களாகும். மகனைக்காண செல்லும் தந்தை பண்டங்களை கொண்டு செல்வார். நீண்ட நாட்கள் செல்ல வேண்டும் என்பதால் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக நெய்ப் பண்டங்களை கொண்டு செல்வார்.

  நெய்ப்பண்டம் அதிக நாள் கெட்டுப்பபோகாமல் இருக்கும். இந்த வழக்கத்தின் காரணமாகத்தான் பிற்காலத்தில் ஐயப்பனுக்கு நெய் தேங்காய் கொண்டு போகும் பழக்கம் ஏற்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பஸ் இயக்க விரைவு போக்குவரத்து கழகம் தயாராக உள்ளது.
  • சபரிமலைக்கு எஸ்.இ.டி.சி., பஸ்கள் இயக்குவதில்லை.

   திருப்பூர் : 

  சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் சென்னை, புதுச்சேரி, திருச்சி, மதுரை, பழனியில் இருந்து பம்பை, குமுளிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

  தற்போது வரை ஈரோடு, கோவை, திருப்பூரில் இருந்து சபரிமலைக்கு எஸ்.இ.டி.சி., பஸ்கள் இயக்குவதில்லை. மாறாக கேரள மாநில விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இங்கு வந்து செல்கின்றன.

  இது குறித்து விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், தங்கள் இருப்பிடத்தில் இருந்து சபரிமலைக்கு குழுவாக சென்று திரும்ப பக்தர்கள் விரும்பினால், பஸ் இயக்க விரைவு போக்குவரத்து கழகம் தயாராக உள்ளது. வழக்கமாக கி.மீ., க்கு பெறப்படும் கட்டணங்களே பெறப்படும். பஸ்களை முன்பதிவு செய்ய, 94450 14435 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo