செய்திகள்

மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி-அமித் ஷா இன்று பிரசாரம்

Published On 2018-10-06 10:07 GMT   |   Update On 2018-10-06 10:07 GMT
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் போட்டி போட்டுக் கொண்டு பிரசாரம் செய்கிறார்கள். #Congress #BJP #RahulGandhi #AmitShah #MadhyaPradeshelection

இந்தூர்:

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சிவராஜ்சிங் சவுகான் முதல் மந்திரியாக இருக்கிறார்.

இந்த முறையாவது மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற வேட்கையில் காங்கிரஸ் உள்ளது. அதே நேரத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் பா.ஜனதா இருக்கிறது.


இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பா. ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் போட்டி போட்டுக் கொண்டு பிரசாரம் செய்கிறார்கள்.

மொரினாவில் நடைபெறும் பழங்குடியினர் மற்றும் விவசாயிகள் மாநாட்டில் ராகுல் காந்தி பேசுகிறார். பின்னர் ஜபல்பூர் சென்று நர்மதா நதி கரையில் நடைபெறும் பூஜையில் கலந்து கொள்கிறார். அவர் சாலையில் ஊர்வலமாக சென்று கட்சி தொண்டர்களையும், மக்களையும் சந்திக்கிறார்.

கடந்த 20 நாட்களில் ராகுல் காந்தி 3-வது முறையாக மத்திய பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

இதே போல பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும், மத்திய பிரதேசத்தில் இன்று ஒரு நாள் பிரசாரம் செய்கிறார். இந்தூரில் உள்ள மால்வாட் நிமாட் பகுதியில் அவர் பேசுகிறார். கிருஷ்ணாபுர பகுதியில் பேரணியை தொடங்கி வைத்து சிறிது தூரம் நடந்து செல்கிறார். அமித்ஷாவுடன் மாநில முதல் மந்திரி சவுகானும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இதேபோல பிரதமர் நரேந்திரமோடி இன்று ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். #Congress #BJP #RahulGandhi #AmitShah #MadhyaPradeshelection

Tags:    

Similar News