செய்திகள்

ராகுல் காந்தி கைலாய மலை யாத்திரை புறப்பட்டார்

Published On 2018-09-01 01:53 GMT   |   Update On 2018-09-01 01:53 GMT
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து சிவனின் உறைவிடமாகவும், புனித தலமாகவும் கருதப்படும் கைலாய மலை மற்றும் மானசரோவர் ஏரிக்கு யாத்திரையாக புறப்பட்டார். #RahulGandhi, #congress
புதுடெல்லி :

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிவ பக்தர் என கூறப்படுகிறது. அவர் நேற்று டெல்லியில் இருந்து சிவனின் உறைவிடமாகவும், புனித தலமாகவும் கருதப்படும் கைலாய மலை மற்றும் மானசரோவர் ஏரிக்கு யாத்திரையாக புறப்பட்டார்.

நாடும், நாட்டு மக்களும் வளமும், வெற்றியும் பெறவேண்டி சிவனின் அருள் பெறுவதற்காக அவர் யாத்திரை சென்றிருப்பதாகவும், இதற்கு 12 நாட்கள் வரை ஆகும் எனவும் காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜெவாலா கூறினார். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் செல்லும் வழித்தடம் குறித்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

ராகுல்காந்தி கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி கர்நாடக தேர்தல் பிரசாரத்துக்காக விமானம் மூலம் சென்றபோது விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டு ஒரு பக்கமாக சாய்ந்து செங்குத்தாக கீழே இறங்கியது. சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு விமானம் சீராக சென்று பாதுகாப்பாக தரையிறங்கியது.

3 நாட்கள் கழித்து ராகுல் காந்தி கைலாய மலைக்கு யாத்திரை செல்ல இருப்பதாக அறிவித்தார். எனவே அவர் விமான விபத்தில் இருந்து உயிர்தப்பியதற்கு பரிகாரமாக சென்றிருக்கலாம் எனவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.  #RahulGandhi, #congress
Tags:    

Similar News