செய்திகள்

கேரள கனமழை பாதிப்புக்கு விளாடிமிர் புடின் இரங்கல் - ஜனாதிபதி, பிரதமருக்கு ரஷிய அதிபர் கடிதம்

Published On 2018-08-21 23:30 GMT   |   Update On 2018-08-21 23:30 GMT
கேரளாவின் வெள்ள பாதிப்பால் பலியானவர்களுக்கு ரஷிய அதிபர் புடின் இரங்கல் தெரிவித்து, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #ViladimirPutin
புதுடெல்லி :

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.  மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. மழை பாதிப்பால் இதுவரை 373 பேர் உயிரிழந்துள்ளனர்.

இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில், கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு சேதங்களில் பங்கு கொள்வதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தோழமையுள்ள ரஷ்யா இந்திய மக்களின் துக்கத்தில் பங்குகொள்கிறது. இந்த இயற்கைப் பேரிடரில் காயம் அடைந்தவர்களும் விரைவில் நலமடைவார்கள் என நம்புகிறோம் என்று எழுதியுள்ளார். 

இதுதொடர்பாக, இந்தியாவுக்கான ரஷிய தூதர் நிகோலய் குடசேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளா மாநிலத்தின் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட பெருத்த சேதத்துக்கு பலர் பலியாகியுள்ளனர். கேரளா துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #ViladimirPutin
Tags:    

Similar News