செய்திகள்

இம்ரான்கான் ஆட்சியில் பயங்கரவாதம், வன்முறை இல்லாத நாடாக பாகிஸ்தான் திகழவேண்டும் - பிரதமர் மோடி

Published On 2018-08-11 22:18 GMT   |   Update On 2018-08-11 22:18 GMT
பாகிஸ்தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள இம்ரான்கான் ஆட்சியின் கீழ் பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லாத நாடாக திகழ வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMModi #ImranKhan #Pakistan
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பாகிஸ்தான் தொடர்பாக கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

இதுதொடர்பாக, அவர் கூறுகையில், இந்தியாவும், பாகிஸ்தானும் நல்ல நட்புறவை பேணும் நாடுகளாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன். அதற்கான முன்முயற்சிகளை பல தடவை நாம் எடுத்து வந்துள்ளோம்.

சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் இம்ரான்கான் கட்சி வெற்றி பெற்றதற்கு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன். அவரது தலைமையின் கீழ் பாகிஸ்தான் பாதுகாப்புடனும், பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லாத நாடாக திகழ வேண்டும்.

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார். #PMModi #ImranKhan 
Tags:    

Similar News