செய்திகள்

செல்போன் மூலம் இன்டெர்நெட் பயன்படுத்துவதில் இந்தியா முதலிடம்

Published On 2018-04-20 10:05 GMT   |   Update On 2018-04-20 10:05 GMT
சர்வதேச அளவில் செல்போன்கள் மூலம் இன்டெர்நெட் பயன்பாடு குறித்து சாம்ஸ்கோர் என்ற நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பு பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

புதுடெல்லி:

சர்வதேச அளவில் செல்போன்களில் இன்டர்நெட் (ஆன்லைன்) பயன்பாடு குறித்து சாம்ஸ்கோர் என்ற நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தியது.

அதில் சர்வதேச அளவில் 30 சதவீதம் நேரம் மட்டுமே ஆன்லைனில் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தியர்களை பொறுத்தவரை 89 சதவீதம் நேரம் இன்டர்நெட்டுக்காக செலவிட்டுள்ளனர். இதன் மூலம் செல்போனில் ‘இன்டர்நெட்’ பயன்படுத்திய நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவுக்கு அடுத்தப்படியாக இந்தோனேசியா (87 சதவீதம்), மெக்சிகோ (80 சதவீதம்), அர்ஜென்டினா (77 சதவீதம்), பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஸ்மார்ட் போன்கள் மற்றும் பயன்பாட்டுக்கான விலை குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் செல்போனில் இன்டர் நெட் பயன்பாடு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் (2017) கம்ப்யூட்டர் மூலம் 1200 நிமிடங்கள் இன்டர்நெட் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் செல்போன் மூலம் 3 ஆயிரம் நிமிடங்கள் அதாவது 50 மணி நேரம் செலவிடப்பட்டுள்ளது.

பெரும்பாலான இந்தியர்கள் செல்போன்களில் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் செல்போன் மூலம் பெறுகின்றனர். அதனால்தான் செல்போன்களில் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ளது. இச்செயல்பாட்டினால் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளை போன்று அதிகரித்துள்ளது. #tamilnews

Tags:    

Similar News