செய்திகள்

சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் இன்று முழுஅடைப்பு போராட்டம்

Published On 2018-04-16 02:16 GMT   |   Update On 2018-04-16 02:16 GMT
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி, ஒய்.எஸ்.ஆர் காங்., கம்யூ., காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
அமராவதி:

ஆந்திரபிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஆளும்தெலுங்குதேசம் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இதனை வலியுறுத்தி பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அண்மையில் தெலுங்குதேசம் கட்சி வெளியேறியது.

இதற்கிடையே ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி இன்று (திங்கட்கிழமை) முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று ஆந்திரபிரதேச பிரத்யேகா ஹோடா சாதனா சமிதி என்ற அமைப்பு அறிவித்து உள்ளது. இந்த போராட்டத்துக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

முழு அடைப்பு போராட்டம் காரணமாக ஆந்திராவில் சாலைகள் வெறிச்சோடின. பெரும்பலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முழு அடைப்பையொட்டி ஆந்திர மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆனால் முழுஅடைப்பு போராட்டம் நடத்துவது மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. #tamilnews
Tags:    

Similar News