search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு அந்தஸ்து"

    • மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசமாகப் பிரித்தது.
    • காஷ்மீர், லடாக் என புதிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.

    புதுடெல்லி:

    மத்திய அரசு கடந்த 2019, ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதாக அறிவித்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.

    இதுதொடர்பான வழக்குகளை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்து வந்தது. இந்த வழக்குகளின் விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கி நடைபெற்றது.

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்குகளை விசாரித்தது.

    16 நாட்கள் நடந்த விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இந்த வழக்குகளில் மத்திய அரசு முடிவுக்கு எதிராக கபில் சிபல், கோபால் சுப்ரமணியம், துஷ்யந்த் தேவ் மற்றும் ராஜீவ் தவான் என மொத்தம் 18 வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.

    அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதில் எந்த தவறும் இழைக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைத்தனர்.

    இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட் செப்டம்பர் 5-ம் தேதி அறிவித்தது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு நாளை வழங்குகிறது.

    ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கிய விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளிக்கவுள்ள தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
    • சிறப்பு அந்தஸ்து கேட்டு பீகார் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பாட்னா:

    பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல் மந்திரி நிதிஷ் குமார் பேசினார். அப்போது அவர் கூறுகையில், உயர் சாதியினர் முதல் ஏழைகள் வரை அனைவரின் முன்னேற்றத்திற்காக நாங்கள் உழைத்து வருகிறோம். பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து தர வேண்டும். சிறப்பு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

    சமீபத்தில் அங்கு சாதிவாரி கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் ஏழைகள் அதிகம் வசிப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அரசு கூறியது. எனவே மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி மக்களை மேம்படுத்த வேண்டும் என மத்திய அரசை பீகார் அரசு மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

    இந்நிலையில், பீகார் அமைச்சரவையில் நேற்று சிறப்பு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதை முதல் மந்திரி நிதிஷ்குமார் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில், சாதிவாரி கணக்கெடுப்புப்படி 94 லட்சம் ஏழை குடும்பங்கள் மாநிலத்தில் உள்ளன. அவர்களின் மேம்பாட்டுக்கு ரூ.2.50 லட்சம் கோடி அளவிலான திட்டங்கள் தேவை. இது மிகப்பெரிய நிதி என்றாலும், மத்திய அரசு உதவினால் இந்தப் பணிகளை செய்துமுடிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

    • பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து தர வேண்டும் என முதல் மந்திரி நிதிஷ் குமார் வலியுறுத்தினார்.
    • சிறப்பு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    பாட்னா:

    பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல் மந்திரி நிதிஷ் குமார் பேசினார். அப்போது அவர் கூறுகையில், உயர் சாதியினர் முதல் ஏழைகள் வரை அனைவரின் முன்னேற்றத்திற்காக நாங்கள் உழைத்து வருகிறோம். பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து தர வேண்டும். சிறப்பு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தப்படும். மத்திய அரசு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கினால், பீகாரை வளர்ந்த மாநிலமாக மாற்ற சிறிது காலம் போதும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால் பிரதமர் மோடி அரசை அகற்றுவோம் என முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, லாலு பிரசாத் கூறுகையில், பீகார் மாநிலத்துக்கு கண்டிப்பாக சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும். சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால் பிரதமர் மோடி அரசை அகற்றுவோம் என ஆவேசமாக குறிப்பிட்டார்.

    • ஜம்மு-காஷ்மீர் தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படும்.
    • ஜம்மு-காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசங்களாக உருவாக்கியது தற்காலிக நடவடிக்கைதான்.

    புதுடெல்லி:

    காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி ஜம்மு-காஷ்மீரும், லடாக்கும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

    காஷ்மீருக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. நாள்தோறும் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராகியுள்ளார். மத்திய அரசு சார்பில் சொல்சிடர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடி வருகிறார்.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் தேர்தலை நடத்த தயார் என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

    இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்தது. அப்போது மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:-

    ஜம்மு-காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்த தயாராக உள்ளோம். தேர்தல் ஆணையம்தான் இனி தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்.

    வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் இருக்கிறது. இந்த பணி முடிவடைய ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் ஆகலாம். ஜம்மு-காஷ்மீர் தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படும். முதலில் பஞ்சாயத்து அளவிலும், அதை தொடர்ந்து நகராட்சி அளவிலும் பின்னர் சட்டசபை தேர்தலும் நடைபெறும்.

    லடாக் மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கான தேர்தல் லே பகுதியில் முடிந்து விட்டது. கார்கில் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும்.

    ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்போது தரப்படும் என காலவரையறை சொல்ல முடியாது. முழு மாநில அந்தஸ்து வழங்கப்படுவதற்கு முன்பாக ஜம்மு காஷ்மீரை தயார்படுத்த வேண்டியுள்ளது.

    ஜம்மு-காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசங்களாக உருவாக்கியது தற்காலிக நடவடிக்கைதான்.

    370-வது பிரிவை நீக்கிய பிறகு 2018 உடன் ஒப்பிடும்போது தீவிரவாதம் தொடர்பான செயல்கள் 45.2 சதவீதம் குறைந்துள்ளது. ஊடுருவல் 90.2 சதவீதம் குறைந்துள்ளது.

    இவ்வாறு மத்திய அரசு வக்கீல் துஷார் மேத்தா கூறினார்.

    மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான கபில்சிபல் பயங்கரவாதிகள் தொடர்பான மத்திய அரசின் தவலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

    அப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பயங்கரவாத சம்பவங்கள் குறித்த மத்திய அரசின் தகவல்கள் 370-வது பிரிவின் அரசியலமைப்பின் தீர்ப்பில் சிக்கலை ஏற்படுத்தாது என்று கபில் சிபலிடம் உறுதி அளித்தனர்.

    • 2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது
    • ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டத்தை மத்திய அரசு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலம் இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    இதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றபட்டது.

    சுமார் மூன்று வருடங்கள் கழித்து இன்று அரசியல் சாசன பெஞ்ச் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. முதற்கட்டாக வழக்கு தொடர்பான ஆவணங்கள், எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்வது போன்ற நடைமுறைக்கான வழிகாட்டுதல்களை நாளை தெரிவிக்கும் வாய்ப்பு உள்ளது.

    தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சில் சஞ்சய் கிஷன், சஞ்ஜீவ் கண்ணா, கவுல் பி.ஆர். கவாய், சுர்ய காந்த் ஆகிய நீதிபகள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த பெஞ்ச் ஜம்மு-காஷ்மீர் மக்கள் கருத்துக்களை கேட்காமல் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது செல்லுமா? இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா? என்பது குறித்து ஆராயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் நிலையில், மத்திய அரசு ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில் ''கடந்த முப்பது வருடங்களாக ஜம்மு-காஷ்மர் பயங்கரவாத தாக்கத்தை எதிர்கொண்டு வந்தது. தற்போது அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் 370 சிறப்பு சட்டப் பிரிவை ரத்து செய்ததுதான்.

    காஷ்மீர் பள்ளத்தாக்கில் தற்போது பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் வழக்கமான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. தொழில் முன்னேற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் அச்சமின்றி அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்'' எனத் தெரிவித்துள்ளது.

    இதற்கு முன் இந்த வழக்கை வெவ்வேறு ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் மார்ச் 2020-ல் விசாரித்தது. அப்போது ஏழு நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்ற மறுத்துவிட்டது.

    • பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
    • எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ஸ்ரீநகர்:

    உலகின் வளர்ந்த, வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது.

    இதையொட்டி பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி20 கூட்டம் இன்று தொடங்கியது. சுற்றுலா தொடர்பான ஜி20 பணிக் குழுவின் 3-வது கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கியது. 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெறும்.

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதல் சர்வதேச கூட்டமாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 20 பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள்.

    ஸ்ரீநகரில் நடைபெறும் இந்த கூட்டத்தின்போது எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காவல்துறை, ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தேசிய பாதுகாப்பு படை, கடற்படை, கமாண்டோக்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ஜபர்வன் மலைப்பகுதி முதல் எழில்மிக்கதால் ஏரி வரை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தால் ஏரியில் கடற்படை காமாண்டோக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் பரவலாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஆசியாவின் சுவிட்சர்லாந்து என அறியப்படும் குல்மார்க் மற்றும் இதர சுற்றுலா தலங்களுக்கு சர்வதேச பிரதிநிதிகள் வருகை புரிவதால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சுற்றுலா தொடர்பான முதல் கூட்டம் குஜராத்தின் கட்ச் பகுதியிலும், 2-வது கூட்டம் மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியிலும் நடைபெற்றது.

    • ஆந்திர மாநில பிரிவினையின்போது காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும்.
    • ஆந்திராவில் 3 தலைநகர்கள் திட்டத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது.

    திருப்பதி:

    ராகுல் காந்தி தேசிய ஒற்றுமை பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர் தற்போது ஆந்திராவில் நடைபயணம் செய்து வருகிறார்.

    கர்னூல் மாவட்டம் அதோனிக்கு நேற்று வந்தார். காங்கிரஸ் தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அவர் அங்குள்ள மகாலட்சுமி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார். பல்வேறு கிராமங்கள் வழியாக ராகுல் காந்தி நடந்து சென்றார். அப்போது பொதுமக்கள் அவரை வரவேற்றனர்.

    அப்போது ராகுல் காந்தி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாட்டில் ஒற்றுமை நிலவ வேண்டியே இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. ஆந்திர மாநில பிரிவினையின்போது காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும்.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். போலவரம் அணை பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். ஆந்திராவில் 3 தலைநகர்கள் திட்டத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது. அமராவதி ஒன்றே ஆந்திராவின் தலைநகராகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்று 3-வது நாளாக ஆந்திராவில் ராகுல்காந்தி நடைபயணம் சென்றார். அவரை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பலர் ராகுல் காந்தியுடன் செல்பி எடுத்து ஆரவாரம் செய்தனர்.

    ×