சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால் மோடி அரசை அகற்றுவோம்: லாலு பிரசாத் ஆவேசம்

பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து தர வேண்டும் என முதல் மந்திரி நிதிஷ் குமார் வலியுறுத்தினார்.சிறப்பு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால் மோடி அரசை அகற்றுவோம்: லாலு பிரசாத் ஆவேசம்
Published on

பாட்னா:

பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல் மந்திரி நிதிஷ் குமார் பேசினார். அப்போது அவர் கூறுகையில், உயர் சாதியினர் முதல் ஏழைகள் வரை அனைவரின் முன்னேற்றத்திற்காக நாங்கள் உழைத்து வருகிறோம். பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து தர வேண்டும். சிறப்பு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தப்படும். மத்திய அரசு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கினால், பீகாரை வளர்ந்த மாநிலமாக மாற்ற சிறிது காலம் போதும் என தெரிவித்தார்.

இந்நிலையில், பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால் பிரதமர் மோடி அரசை அகற்றுவோம் என முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, லாலு பிரசாத் கூறுகையில், பீகார் மாநிலத்துக்கு கண்டிப்பாக சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும். சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால் பிரதமர் மோடி அரசை அகற்றுவோம் என ஆவேசமாக குறிப்பிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com