செய்திகள்

மந்திரியின் பேச்சுவார்த்தையால் கேரள தனியார் பஸ் ஸ்டிரைக் வாபஸ்

Published On 2018-02-21 10:21 GMT   |   Update On 2018-02-21 10:21 GMT
கேரளாவில் பஸ் கட்டணத்தை கூடுதலாக உயர்த்த கோரிக்கை விடுத்த நிலையில் மந்திரி அளித்த உறுதிமொழியை ஏற்று ஸ்டிரைக்கை வாபஸ் பெற்று விடுவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் வருகிற மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களுக்கு இந்த கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை கேரள அரசு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் கேரள அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச பஸ் கட்டண உயர்வு போதாது என்றும் கூடுதலாக பஸ் கட்டணத்தை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை அரசு ஏற்கவில்லை.

இதை தொடர்ந்து கடந்த 16-ந்தேதி முதல் கேரளாவில் தனியார் பஸ்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். 14 ஆயிரத்து 500 தனியார் பஸ்கள் கேரளாவில் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

இதைதொடர்ந்து திருவனந்தபுரத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் கேரள அரசு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. மாநில போக்குவரத்துத்துறை மந்திரி சசீந்தரன் இதில் கலந்துகொண்டார். பேச்சு வார்த்தையில் மந்திரி அளித்த உறுதிமொழியை ஏற்று ஸ்டிரைக்கை வாபஸ் பெற்று விடுவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதுபற்றி தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கோபிநாத் கூறுகையில் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு உறுதி அளித்துள்ளது. போராட்டம் காரணமாக பொதுமக்களும் சிரமப்படுவதால் எங்கள் ஸ்டிரைக்கை வாபஸ் பெறுகிறோம் என்றார். #tamilnews
Tags:    

Similar News