செய்திகள்

திரிபுரா சட்டசபை தேர்தல் - 1 மணி நிலவரப்படி 45.86 சதவீதம் வாக்குகள் பதிவானது

Published On 2018-02-18 09:21 GMT   |   Update On 2018-02-18 09:21 GMT
திரிபுரா மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டசபை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 45.86 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #TripuraElection2018
அகர்தலா:

திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது. பொதுமக்கள் காலையிலேயே வரிசையில் வந்து நின்று வாக்கு சாவடிகளில் தங்களின் வாக்குகளை பதிவுசெய்து வருகின்றனர்.  

இந்த தேர்தலில் 307 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 25 லட்சத்து 73 ஆயிரத்து 413 வாக்காளர்களுக்காக 3,214 ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி 45.86% வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி திரிபுரா மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரது பேச்சை மக்கள் கேட்பார்கள் என்று நாங்கள் உறுதியுடன் நம்புகிறோம் என மாநில பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குப்பதிவை ஒட்டி அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அண்டை நாடான வங்காள தேசத்துடனான எல்லை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இன்று பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 
#TripuraElection2018 #TamilNews
Tags:    

Similar News