செய்திகள்

ஆண் போல் வேடமிட்டு 2 திருமணம் செய்த பெண்

Published On 2018-02-16 08:05 GMT   |   Update On 2018-02-16 08:05 GMT
பேஸ்புக் மூலம் ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் போலீசில் பிடிபட்டுள்ளார்.
லக்னோ:

ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் போலீசில் பிடிபட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த நூதன மோசடி நடந்துள்ளது. மோசடிப் பெண்ணின் பெயர் ஸ்வீட்டி. பிக்னோர் என்ற இடத்தைச் சேர்ந்த இவர் தனது பெயரை கிருஷ்ணா சென் என மாற்றிக்கொண்டு பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கினார். இதன்மூலம் வசதிபடைத்த பெண்களை வளைத்துப் போட்டு பணம் பறிக்க திட்டமிட்டார்.

நீண்ட தலைமுடியை ‘கிறாப்’ வெட்டி ஆண்களைப் போல் ஜீன்ஸ் சட்டை அணிந்து பேஸ்புக்கில் படங்களை வெளியிட்டார். படித்த இளைஞன் போன்ற தோற்றம் கொண்ட அவருடன் பலர் பேஸ்புக்கில் நட்பாக பழகினார்கள். வசதிபடைத்த பெண்களை மட்டும் தேர்வு செய்து அவர்களுடன் அடிக்கடி பேசி நட்பை வளர்த்துக் கொண்டார். காதல் மொழிகளையும் அள்ளிவிட்டார்.

இதை நம்பிய நைனிடாலைச் சேர்ந்த ஒரு பெண் கிருஷ்ணா சென்னின் மோசடி காதல் வலையில் வீழ்ந்தார். இவரது தந்தை பெரிய தொழில் அதிபர் பல்புகள் தயாரிக்கும் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இதை தெரிந்துகொண்ட கிருஷ்ணா சென் அவரை மணக்க விருப்பம் தெரிவித்தார்.

இதற்காக கிருஷ்ணா சென் போலியாக பெற்றோர்களை ஏற்பாடு செய்து தன்னை மணமகன் போல் மாற்றி 2014-ல் தொழில் அதிபர் மகளை திருமணம் செய்தார். இருவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தினர். அப்போது செயற்கையான உறுப்புகளை ஆன்லைனில் வாங்கி அதன்மூலம் தாம்பத்திய உறவு கொண்டார். அப்போதுதான் அவர் ஆண் இல்லை என தெரியவந்தது. இதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்தார்.

இந்தநிலையில் வரதட்சணை கேட்டு அவரை கிருஷ்ணாசென் அடித்து துன்புறுத்தினார். அவரது சித்ரவதை தாங்காமல் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்தார். இவ்வாறு ரூ.8.5 லட்சம் வரை பணம் பறித்தார்.

இதில் ருசி கண்ட கிருஷ்ணா சென் கலா துங்கியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணையும் இதேபோல் ஏமாற்றி திருமணம் செய்தார். அவரையும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார். இரு பெண்களையும் மாறி மாறி துன்புறுத்தி ஏமாற்றி பணம் பறித்து வந்தார்.



ஆனால் கிருஷ்ணா சென்னின் கொடுமை நாளுக்குநாள் அதிகரித்ததாள் பொறுத்துக்கொள்ள முடியாத முதல் மனைவி இதுபற்றி போலீசில் புகார் செய்தார். போலீசார் பொறிவைத்து கிருஷ்ணா சென் என்ற ஸ்வீட்டியை கைது செய்தனர்.

தனது வே‌ஷம் கலைந்ததால் ஸ்வீட்டி போலீஸ் லாக்கப்பில் கம்பி எண்ணுகிறார். ஆண்போல் நடித்தது மட்டுமல்லாமல் ஆண்கள் போல் சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளார்.

4 வருடங்களாக இவ்வாறு ஏமாற்றி வந்துள்ளார். கிருஷ்ணா சென் ஆண் இல்லை என்பதை அறிந்த அக்கம் பக்கம் வசித்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்களை இத்தனை வருடமாக ஏமாற்றி வந்துள்ளாரே என்று வியப்படைந்துள்ளனர். அவர்மீது ஏமாற்றி பணம் பறித்தல், மோசடி, பெண்களை துன்புறுத்துதல், உள்பட பல பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News