செய்திகள்

அரசுப் பணிகளில் அனாதைகளுக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு: மகாராஷ்டிர மந்திரிசபை ஒப்புதல்

Published On 2018-01-17 15:56 GMT   |   Update On 2018-01-17 15:56 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசுப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பில் அனாதைகளுக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க அம்மாநில மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. #Maharashtracabinet
மும்பை:

மகாராஷ்டிர மந்திரிசபையின் கூட்டம் இன்று முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி பங்கஜா முன்டே, ‘தாங்கள் எந்த சாதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியாததால் கடும் அவதிக்குள்ளாகிவரும் அனாதைகள் எந்த பிரிவின்கீழ் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிப்பது? என்பது தெரியாமல் தவித்து வருகின்றனர்.

இதனால், எந்த சிறப்பு பிரிவிலும் சேர முடியாமல் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டு திட்டங்களில் அவர்களுக்கு தேவையான சலுகைகள் கிடைப்பதில்லை. இதை கருத்தில் கொண்டு பொதுப் பிரிவில் அரசுப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பில் அனாதைகளுக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க மாநில மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த வாய்ப்பின் மூலம் அவர்கள் அரசு வேலைகளை பெறுவதுடன் இதர வசதிகளையும் பெறுவார்கள்’ என குறிப்பிட்டார். #tamilnews #Maharashtracabinet
Tags:    

Similar News