இந்தியா

குஜராத் தீ விபத்தில் சிக்கி 27 பேர் பலி: உயிரிழந்தோருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

Published On 2024-05-26 01:40 GMT   |   Update On 2024-05-26 01:40 GMT
  • இந்த தீ விபத்து தொடர்பாக விளையாட்டு திடல் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • தீ விபத்து குறித்து அறிந்த முதல் மந்திரி பூபேந்திர படேல், மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு வளாகத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 9 குழந்தைகள் உட்பட 27 பேர் பலியானதாக தகவல் வெளியானது.

தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கப் போராடினர். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

தீ விபத்து குறித்து அறிந்த முதல் மந்திரி பூபேந்திர படேல், மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த தீ விபத்து தொடர்பாக விளையாட்டு திடல் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ராஜ்கோட் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் மாநில அரசு வழங்கும் என்று முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இந்த நிகழ்வில் அலட்சியம் காட்டப்படாது. இது தொடர்பாக, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News