இந்தியா

டெல்லி: குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 குழந்தைகள் உயிரிழப்பு

Published On 2024-05-26 02:37 GMT   |   Update On 2024-05-26 02:37 GMT
  • இந்த தீ விபத்தில் இருந்து 12 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.
  • ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தீ விபத்தில் இருந்து 12 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. அதில் ஒரு குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையின் விசாரணையில் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு வளாகத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 9 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News