செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்க வேண்டும்: சுப்ரமணிய சாமி வலியுறுத்தல்

Published On 2017-12-26 23:10 GMT   |   Update On 2017-12-26 23:10 GMT
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இப்போதே போர் தொடுக்க வேண்டும் என பாஜக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணிய சாமி வலியுறுத்தியுள்ளார்.
மும்பை:

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி, இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷன் ஜாதவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஜாதவை பார்க்க அவரது மனைவி மற்றும் தாயாருக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியது.

இதற்கிடையே, இஸ்லாமாபாத்தில் ஜாதவ் மனைவியும், தாயாரும் அவரை நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது பாதுகாப்பு என்ற பெயரில் தாலி, வளையல்களை கழற்ற வைத்தும் நெற்றியில் இருந்த பொட்டை அழிக்கச் செய்தும் இந்த சந்திப்பு நடந்ததாக செய்தி வெளியானது. விரும்பத்தகாத இந்த செயலுக்காக பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.



மகாபாரதத்தில் திரவுபதியின் துகிலுரிந்த நடவடிக்கைக்கு என்ன பலன் கிடைத்ததோ, அதுபோல் ஜாதவ் தாயார் மற்றும் அவரது மனைவிக்கு நிகழ்ந்த அவமதிப்புக்கு பாகிஸ்தான் தண்டனை பெற வேண்டும். இந்த சம்பவம் இந்தியாவில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன், காயப்படுத்தியும் உள்ளது.

எனவே, பாகிஸ்தான் மீது இந்தியா இப்போது அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தான் மீது இந்தியா இப்போது போர் தொடுத்து அதை நான்கு கூறாக்க வேன்டும். மேலும், இதற்கான நடவடிக்கைகளில் இந்தியா அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News