செய்திகள்

கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும்: சித்தராமையா

Published On 2017-12-15 23:31 GMT   |   Update On 2017-12-15 23:31 GMT
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் முதல் மந்திரி சித்தராமையா சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ரெய்ச்சூரில் செய்தியாளர்களிடம் சித்தராமையா கூறியதாவது:

மத்தியில் பா.ஜ.க.வினர் ஆட்சியில் உள்ளனர். தேர்தல் ஆணையம் அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. அவர்கள் தான் தலைமை தேர்தல் அதிகாரியை நியமனம் செய்து வருகின்றனர்.

சமீப காலமாக நடைபெற்று வரும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அதன் மீதான நம்பகத்தன்மை அதிகரித்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

எனவே, முன்புபோல், வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும். கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.

இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்த உள்ளோம்.

இமாசலப்பிரதேசம், குஜராத் மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்பது வெறும் கருத்துக் கணிப்பு தான். டிசம்பர் 18-ம் தேதி என்ன நடக்கிறது என பார்ப்போம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News