செய்திகள்

குஜராத் சட்டசபை தேர்தல்: வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் மோடி

Published On 2017-12-14 06:50 GMT   |   Update On 2017-12-14 06:50 GMT
குஜராத் சட்டசபைக்கான இரண்டாவது கட்ட தேர்தலில் சமர்பதி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி தனது ஓட்டை பதிவு செய்தார்.
காந்திநகர்:

குஜராத் மாநில சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைந்ததும் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 9-ம் தேதி 83 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 67 சதவிகித ஓட்டுகள் பதிவானதாக கூறப்பட்டது.

93 தொகுதிகளுக்கு இரண்டாம் மற்றும் இறுதிகட்டமாக வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடந்து வருகிறது. 851 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களில், 69 பேர் பெண்கள் ஆகும். 25,558 வாக்குச்சாவடிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சற்று நேரத்திற்கு முன்னதாக தொடங்கியது. ஆண்கள் மற்றும் பெண்கள் ஆர்வமாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

காலை 8 மணிக்கே பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பெண், காந்திநகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிதார். அதே போல், பட்டேல் இன போராட்டக்குழுவின் தலைவர் ஹர்திக் பட்டேல், முன்னாள் முதல்வர் ஆனந்திபெண் பட்டேல் ஆகியோர் தங்களது வாக்குச்சாவடியில் ஓட்டுகளை செலுத்தினர்.

அகமதாபாத்தின் நாரன்புராவில் உள்ள வாக்குச்சாவடியில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா தனது ஓட்டை பதிவு செய்தார். வேஜால்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் நிதி மந்திரி அருண் ஜெட்லி வாக்களித்தார்.

சமர்பதி தொகுதியில் உள்ள 115-ம் எண் வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். இந்த தொகுதியில் பா.ஜ.க சார்பில் அரவிந்த் படேலும், காங்கிரஸ் சார்பில் ஜீதுபாய் படேலும் போட்டியிடுகின்றனர்.
Tags:    

Similar News