என் மலர்
நீங்கள் தேடியது "gujarath election"
- இமாசலபிரதேசத்தில் நகர்புற வாக்காளர்களில் பலர் ஓட்டுப் போடவில்லை.
- சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் காந்திதாம் தொகுதிகளில் வாக்குப் பதிவு குறைந்துள்ளது.
இமாச்சல் பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12ந் தேதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. குஜராத் சட்டசபைக்கு முதல் கட்ட தேர்தல் ஒன்றாம் தேதி நடைபெற்றது. 2ம் கட்ட தேர்தல் 5ந் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இமாசலபிரதேசத்தில் நகர்ப்புற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களில் பலரும் வாக்களிக்கவில்லை. சிம்லாவில் 62.53 சதவீத வாக்குகளே பதிவாகின. கடந்த தேர்தலைக் காட்டிலும் இது 13 சதவீதம் குறைவு. குஜராத்தில் முதல் கட்ட தேர்தலில் நகரங்களில் நடந்த வாக்குப்பதிவு, அங்குள்ள வாக்காளர்கள் அக்கறையின்றி இருப்பதையே காட்டுகிறது. இதனால் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது.
சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக காணப்படுகிறது. காந்திதாம் தொகுதியில் மிகக்குறைந்த அளவாக 47.8 சதவீத வாக்குகளே பதிவாகி இருக்கிறது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 6.34 சதவீதம் குறைவு. அடுத்தபடியாக சூரத்தில் உள்ள கரஞ்ச் தொகுதியில் கடந்த தேர்தலில் 55.91 சதவீத வாக்குகள் பதிவாகின. இப்போது அதைவிட 5.37 சதவீதம் குறைவாகவே மக்கள் வாக்களித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







