செய்திகள்

அதிகாரிகள் மது குடிப்பதை நிதிஷ்குமார் அரசு கண்டுகொள்வதில்லை: முன்னாள் முதல் மந்திரி குற்றச்சாட்டு

Published On 2017-12-13 18:18 GMT   |   Update On 2017-12-13 18:18 GMT
பீகார் மாநிலத்தில் அரசு அதிகாரிகள் மது குடிப்பதை நிதிஷ்குமார் அரசு கண்டு கொள்வதில்லை. அவர்கள் ஏழைகளை குறிவைத்து செயல்பட்டு வருகின்றனர் என முன்னாள் முதல் மந்திரி மஞ்சி குற்றம் சாட்டினார்.
பாட்னா:

பீகார் மாநிலத்தில் அரசு அதிகாரிகள் மது குடிப்பதை நிதிஷ்குமார் அரசு கண்டு கொள்வதில்லை. அவர்கள் ஏழைகளை குறிவைத்து செயல்பட்டு வருகின்றனர் என முன்னாள் முதல் மந்திரி மஞ்சி குற்றம் சாட்டினார்.

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் ஜித்தன் ராம் மஞ்சி. இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி தலைவரான இவர், கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் முதல் மந்திரியாக பதவி வகித்தார்.

இந்நிலையில், பாட்னாவில் தலித்களுக்கு ஆதரவாக நடத்திய போராட்டத்தில் ஜித்தன் ராம் மஞ்சி இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

குழந்தை பருவத்தில் எனது தாய் பூஜை செய்யும்போது கடவுளுக்காக மது பாட்டில் வைத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இன்று அப்படி செய்தால் எனது தாய்க்கு குறைந்தது 10 ஆண்டு சிறை தண்டனை கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.
 


இதேபோல், சிலருக்கு மருந்தாக மது குடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நிதிஷ்குமார் அரசு, இதுபோன்ற ஏழை மக்களை குறிவைத்து செயல்பட்டு வருகிறது.

ஆனால், நிதிஷ்குமார் அரசு அதிகாரிகளிடம் இருந்து இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். அரசு அதிகாரிகள், ஆணையர்கள் மற்றும் முதன்மை செயலாளர்கள் உள்பட பலர் தங்களுக்கு தேவையான சமயத்தில் மது குடித்து வருகின்றனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிதிஷ் அரசு, ஏழைகளை குறிவைத்து செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News