செய்திகள்

குஜராத் சட்டசபை தேர்தல்: இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

Published On 2017-11-20 21:37 GMT   |   Update On 2017-11-20 21:37 GMT
குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 9 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை நேற்று வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:

குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 9 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை நேற்று வெளியிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 89 தொகுதிக்கும் இரண்டாம் கட்டமாக 93 தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 18-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சட்டபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 77 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது.

இந்நிலையில், குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 9 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில் பிரதியுமான்சிங் ஜடேஜா, ஆடம் சக்கி, சண்டோக் அரித்யா, மிதுல் டோங்கா, தினேஷ் சோவடியா, ஜிவான் கும்பர்வாடியா, அஷோக் லால், விக்ரம் மதாம், மற்றும் மேராமன் கோரியா ஆகியோர் அடங்குவர்.  

மேலும், முதல் பட்டியலில் வெளியிடப்பட்ட 4 பேருக்கு பதிலாக வேறு நபர்கள் வேட்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
Tags:    

Similar News