செய்திகள்

இமாசலப்பிரதேசத்தில் பாலம் இரண்டாக உடைந்து விபத்து: 6 பேர் காயம்

Published On 2017-10-20 12:28 GMT   |   Update On 2017-10-20 12:28 GMT
இமாசலப்பிரதேசம் மாநிலத்தில் இரண்டு நகரை இணைக்கும் சிமெண்ட் பாலம் இரண்டாக உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
சிம்லா:

இமாசலப்பிரதேசம் மாநிலம் சம்பா நகர் மற்றும் பஞ்சாப் மாநிலம் பதன்கோட் மாவட்டத்திற்கு இடையே உள்ள ஆற்றின் நடுவே உள்ள சிமெண்ட் பாலம் நேற்று இடிந்து விழுந்தது. இதில் 6 பேர் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து ஏற்படும் போது கார், மினி லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் சென்றுக் கொண்டிருந்தது. பாலம் இரண்டாக இடிந்ததில் மோட்டார் சைக்கிள் ஆற்றில் விழுந்தது. மற்ற வாகனங்கள் உடைந்த பாலத்தில் சிக்கின.

பாலமானது 15 ஆண்டுகளுக்கு முன்னர் நபார்ட் மூலம் கட்டப்பட்டது. அதன் கட்டுமான பொருட்கள் தரக்குறைவாக இருந்ததால் விபத்து ஏற்பட்டடிருக்கலாம். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
Tags:    

Similar News