செய்திகள்

எல்லையில் மீண்டும் அத்துமீறல்: பாக். ராணுவம் தாக்குதலில் 9 வயது சிறுவன், 15 வயது சிறுமி பலி

Published On 2017-10-02 04:37 GMT   |   Update On 2017-10-02 10:26 GMT
ஜம்மு-காஷ்மீர் எல்லையோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 9 வயது சிறுவன் மற்றும் 15 வயது சிறுமி உயிரிழந்தனர்.
ஜம்மு:

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் இன்றும் அத்து மீறி தாக்குதலில் ஈடுபட்டது. பூஞ்ச் மாவட்டம் கெர், கசாபா, திக்வார் செக்டார் எல்லை பகுதியில் இன்று காலை 6.30 மணிக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதேபோல பீரங்கி தாக்குதலிலும் ஈடுபட்டனர்.

அங்குள்ள கிராமங்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்கினர். 12 கிராமங்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இதையடுத்து இரு தரப்பு ராணுவ வீரர்களும் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 9 வயது சிறுவன், 15 வயது சிறுமி பலியானார்கள். கசாபா செக்டாரில் இஸ்ரர் அகமது என்ற சிறுவனும், திக்வாரில் சிறுமியும் ஆக 2 பேர் குண்டு பாய்ந்து பலியானார்கள்.

மேலும் கிராம மக்களில் 12 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
Tags:    

Similar News