செய்திகள்

வீட்டுப் பாடம் எழுதாத மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியர் மீது வழக்கு

Published On 2017-09-15 12:22 GMT   |   Update On 2017-09-15 12:22 GMT
குஜராத் மாநிலத்தில் வீட்டுப் பாடம் எழுதாத மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அகமதாபாத்:

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன் காலை வகுப்புகள் தொடங்கின. சிறிது நேரத்தில் ஆசிரியர் மாணவர்களின் வீட்டுப் பாடங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, 8 வயது மாணவன் ஒருவன் வீட்டு பாடம் எழுதாதது தெரிய வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர், ஏன் வீட்டுப் பாடம் எழுதவில்லை? என கேட்டு மாணவனை சரமாரியாக தாக்கியதுடன், பிரம்பால் வெளுத்து விட்டார்.

இதில் மாணவனின் முதுகில் பிரம்பு தளும்புகள் அச்சாக பதிந்தது. இதையடுத்து அவன் அழுது கொண்டே வீட்டுக்கு சென்று, பள்ளியில் நடந்ததை பெற்றோரிடம் கூறினான்.

இதுதொடர்பாக, மாணவனின் பெற்றோர் உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தி, பள்ளியில் இருந்த கண்காணிப்பு கேமராவை சோதனை செய்தனர். அதில் ஆசிரியர் மாணவனை பிரம்பால் அடிப்பது பதிவாகி இருந்தது தெரிந்தது. இதையடுத்து ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News