செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க சுப்பிரமணியசாமி யோசனை

Published On 2017-09-05 18:40 GMT   |   Update On 2017-09-05 18:40 GMT
அ.தி.மு.க. ஆட்சி தொடர்வதற்கு வசதியாக மற்றொருவரை முதல்-அமைச்சராக தேர்வு செய்யுமாறு எடப்பாடி பழனிசாமி சசிகலாவிடம் கூற வேண்டும் என பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்
புதுடெல்லி:

சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நேற்று நடத்தினார். இந்த கூட்டம், அவர் தனிப்பெரும்பான்மை பலத்தை கொண்டிருக்கவில்லை என காட்டியது.

இதையொட்டி பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி டுவிட்டரில் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறி இருப்பதாவது:-

எடப்பாடி பழனிசாமி முறையாக பெரும்பான்மையை இழந்துவிட்டார். அ.தி.மு.க. ஆட்சி தொடர்வதற்கு வசதியாக மற்றொருவரை முதல்-அமைச்சராக தேர்வு செய்யுமாறு அவர் சசிகலாவிடம் கூற வேண்டும். அப்படி செய்யாவிட்டால், தி.மு.க. உள்ளே (ஆட்சி அதிகாரத்தில்) வந்து விடும்.

இவ்வாறு அதில் சுப்பிரமணிய சாமி கூறி உள்ளார்.
Tags:    

Similar News