செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய நிதிஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் தீர்மானம்

Published On 2017-08-19 10:57 GMT   |   Update On 2017-08-19 10:57 GMT
பீகாரில் முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஜக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுடெல்லி:

பீகார் மாநிலத்தில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இணைந்த மெகா கூட்டணியின் ஆட்சி கடந்த ஜூலை 26-ம் தேதி முடிவுக்கு வந்தது. முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், மறுநாளே பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தார். அப்போதே, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர் இணைய முடிவெடுத்திருப்பதாக பேசப்பட்டது.

அவரது கூட்டணி முடிவுக்கு ஐக்கிய ஜனதா தளம் தலைவர்களில் ஒருவரான சரத் யாதவ் அதிருப்தி தெரிவித்தார். அவரது ஆதரவாளர்களும் தனித்து செயல்படத் தொடங்கி உள்ளனர். இதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் முதல் மந்திரி நிதிஷ் குமார் வீட்டில் இன்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இணைவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டம் நடைபெற்ற அதே சமயத்தில், சரத் யாதவ் தனது ஆதரவாளர்களை திரட்டி கூட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News