செய்திகள்

சோனியா காந்தியை காணவில்லை என சுவரொட்டிகள்: ரேபரேலி தொகுதியில் பரபரப்பு

Published On 2017-08-15 15:12 GMT   |   Update On 2017-08-15 15:12 GMT
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை காணவில்லை என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரேபரேலி:

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி எம்.பி.யை காணவில்லை என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளது. சுதந்திர தினமான இன்று நகரின் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்த அந்த சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

சோனியா காந்தியை நீண்டகாலமாக காணவில்லை. இதனால் ரேபரேலியில் பல வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் தலைவரின் இந்த நடவடிக்கை ரேபரேலி மக்களை அவமானப்படுத்துவதாக உள்ளது. அவரை பற்றி தகவல் தருபவர்களுக்கு உரிய வெகுமதி அளிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. போஸ்டர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் அவற்றை அப்புறப்படுத்தினர்.

காங்கிரஸ் தலைவர்களை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக பா.ஜனதா அரசு இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் குற்றம் சாட்டிஉள்ளனர்.

உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு பின்னர் கடந்த 5 மாதங்களாக சோனியா காந்தி தனது தொகுதிக்கு போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்னர் அமேதி தொகுதியில் அந்த தொகுதி எம்.பி.யான காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை காணவில்லை என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
Tags:    

Similar News