செய்திகள்

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பவளவிழா ஆலோசனை கூட்டம்: ராகுல் பங்கேற்கவில்லை

Published On 2017-08-08 15:16 GMT   |   Update On 2017-08-08 15:16 GMT
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-ஆம் ஆண்டு கொண்டாட்டம் தொடர்பாக காங்கிரஸ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.
புதுடெல்லி:

அந்நியரிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை மீட்க சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலவேறு போராட்டங்களை நடத்தினர். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று, மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கம். இது 1942 ஆம் ஆண்டு ஆகஸ்டில் நடைபெற்றது.

இந்நிலையில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-ஆம் ஆண்டு நிறைவை வெகு சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக காங்கிரஸ் செயற்குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது.



ஆனால், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் கொண்டாட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து காங்கிரசார் கூறுகையில், மகாத்மா காந்தியால் 1942ல் தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை வெகு சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் இந்த கூட்டத்தில் துணை தலைவர் ராகுல் காந்தியால் கலந்து கொள்ள இயலவில்லை என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News