search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mahathma gandhi"

    கேரளாவில் கடந்த நூற்றாண்டில் மிகபெரிய சேதத்தை ஏற்படுத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மகாத்மா காந்தி நிதி திரட்டி தந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. #KeralaRain #Keralaflood #MahathmaGandhi
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பெய்த தென்மேற்கு  பருவமழையால் அந்த மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. மொத்தமுள்ள 36 அணைகளில் 33 அணைகள்  நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்தன.

    கனமழையால் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்குக்கு மத்திய அரசு நிவாரண உதவி வழங்கியுள்ளது. மேலும் பல்வேறு மாநில அரசுகளும் நிவாரண நிதி அளித்து வருகின்றன.

    இந்நிலையில், கேரளாவில் கடந்த நூற்றாண்டில் மிகபெரிய சேதத்தை ஏற்படுத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மகாத்மா காந்தி நிதி திரட்டி தந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.



    இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் கூறியதாவது:

    கடந்த நூறாண்டுக்கு முன்பு கேரளா மாநிலம் மலபார் என அழைக்கப்பட்டு வந்தது. 1924ம் ஆண்டில்  அப்போதைய மலபாரில் கனமழை பெய்தது. இதையடுத்து, அந்த பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்புக்கு உள்ளானது. 

    அதைத்தொடர்ந்து, மலபார் பகுதிக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. மகாத்மா காந்தி தான் நடத்தி வந்த யங் இந்தியா மற்றும் நவஜீவன் ஆகிய பத்திரிகைகளில் மலபாருக்கு நிவாரண உதவிகள் வழங்கும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.

    அவரது கோரிக்கையை ஏற்று வாசகர்கள் பலர் நிவாரண உதவிகளை அவரது பத்திரிகைகளுக்கு அனுப்பினர். அதன்படி, ஒருவர் இரண்டு மெட்டிகளையும், ஒரு பெண் தனது கொலுசுகளையும், இளைஞர் ஒருவர் தங்க காது தோடுகளை நிவாரணத்துக்கு அளித்துள்ளார். மேலும், 6 ஆயிரம் ரூபாய், 13 அணா மற்றும் 3 பைசா நிவாரண உதவித்தொகையாக வந்துள்ளதாக காந்தி கூறினார் என தெரிவித்தார். #KeralaRain #Keralaflood #MahathmaGandhi
    ×