செய்திகள்
டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் மண்டை ஓடுகளை வைத்து கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள்

டெல்லியில் தமிழக விவசாயிகள் கொட்டும் மழையில் போராட்டம்

Published On 2017-07-17 12:05 GMT   |   Update On 2017-07-17 12:05 GMT
டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கொட்டும் மழையில் போராட்டம் நடத்தினர்.
புதுடெல்லி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் நேற்று முதல் தொடர் போராட்டத்தை தொடங்கினர்.

நேற்று பிரதமர் அலுவலகம் முன்பு கோவணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை டெல்லி போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

இந்நிலையில் இன்று 2-வது நாளாக ஜந்தர்மந்தர் பகுதியில் மண்டை ஓடுகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பலத்த மழை பெய்தது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடியே கோரிக்கைளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் மண்டை ஓடுகளை வைத்து கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள்
Tags:    

Similar News