செய்திகள்

விமானத்தில் இன்டர்நெட் வசதி: விரைவில் அனுமதி அளிக்க முடிவு

Published On 2017-05-22 08:10 GMT   |   Update On 2017-05-22 08:10 GMT
விமானத்தில் இன்டர்நெட் வசதி வழங்க மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை முடிவு செய்துள்ளது. வருகிற ஆகஸ்டு மாதம் இதற்கான அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:

விமானப் பயணிகள் விமானத்தில் இருந்தபடியே இணைய தளத்தை பயன்படுத்தும் வசதிகள் பல வெளிநாட்டு விமானங்களில் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

இதன்படி விமானத்தில் வை-பை வசதி செய்யப்பட்டிருக்கும் அதன் மூலம் பயணிகள் தாங்கள் கொண்டு செல்லும் லேப் டாப், செல்போன் போன்றவற்றில் இணைய தளவசதியை பெற்று பயன்படுத்தி கொள்ளலாம்.

தற்போது உலகம் முழுவதும் 70 விமானநிறுவனங்கள் இந்த வசதியை செய்து கொடுத்து உள்ளன.

ஆனால் இந்தியாவில் விமானங்களில் இதுவரை இணைய தளவசதி வழங்கப்படவில்லை. இதற்கு மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அனுமதி பெற வேண்டும். ஆனால் இதுவரை அந்த துறை அனுமதி வழங்காததால் விமானத்தில் இணைய தளவசதி செய்யப்படவில்லை.



தற்போது இதற்கு அனுமதி வழங்க தகவல்-தொழில் நுட்பத்துறை ஆலோசித்து வருகிறது. வருகிற ஆகஸ்டு மாதம் இதற்கான அனுமதி வழங்கப்படும் என்று எதிர் பார்க்கின்றது.

அதன் பிறகு ஜெட்-ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட், விஸ்தரா உள்ளிட்ட தனியார் விமானங்களில் இந்த வசதி செய்து கொடுக்கப்பட உள்ளது. தற்போது இந்தியாவில் இயக்கப்படும் வெளிநாட்டு விமானங்களான ஏர் பிரான்ஸ், கே.எல்.எம்., லுப்தான்சா, பிரிட்டிஷ் ஏர்வேஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ், எதிகாட், கத்தார் ஏர்வேஸ், ஆகியவற்றில் இணையதள வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News