செய்திகள்

டெல்லியில் இன்று கோர்ட் வாசலில் விசாரணை கைதி சுட்டுக் கொலை

Published On 2017-04-29 09:16 GMT   |   Update On 2017-04-29 09:16 GMT
டெல்லியில் உள்ள ரோகினி மாவட்ட நீதிமன்றத்தின் வாசலில் இன்று பட்டப்பகலில் விசாரணையை கைதியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி:

அரியானா மாநிலம், ஜாஜார் மாவட்டத்தை சேர்ந்த மோஹித் என்பவனை டெல்லியில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்தனர். மற்றொரு கொலை வழக்கு தொடர்பாக அரியானா போலீசாரால் பின்னர் கைது செய்யப்பட்ட மோஹித் அரியானா மாநிலத்தில் உள்ள ஜஜ்ஜார் மாவட்ட சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.

இந்நிலையில், டெல்லி கொலை வழக்கு தொடர்பாக இன்று ரோகினி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அரியானா மாநில போலீசார் இன்று அழைத்து வந்தனர்.



அப்போது, கோர்ட் வாசலில் மறைந்து காத்திருந்த ஒரு மர்ம நபர் மோஹித்தை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மோஹித் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

கொலையாளி ராஜேஷ் தப்பியோட முயன்றபோது அவரை மடக்கிப் பிடித்து கைது செய்த போலீசார் இந்த படுகொலைக்கான பின்னணி தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பரபரப்பான ரோஹினி பகுதியில் உள்ள நீதிமன்ற வாசலில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த படுகொலை அப்பகுதிவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News