உள்ளூர் செய்திகள்

உடுமலை வெங்கடேச பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகள் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்த காட்சி. கொலு வைக்கப்பட்டிருந்த காட்சி.

உடுமலை கோவில்கள், வீடுகளில் நவராத்திரி வழிபாடு

Published On 2022-09-28 04:50 GMT   |   Update On 2022-09-28 04:50 GMT
  • வெங்கடேச பெருமாள் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
  • பக்தர்களுக்கு பொங்கல், சுண்டல் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.

உடுமலை :

உடுமலைப் பகுதி கோவில்கள் மற்றும் வீடுகளில் நவராத்திரி கோலாகலமாக துவங்கி உள்ளது. உடுமலை திருப்பதி கோவிலில் கொலுப்படிகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. வெங்கடேச பெருமாள் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். உற்சவமூர்த்திகள் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்த போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதுபோல உடுமலை சத்திரம் வீதி சௌடாம்பிகை கோவில் ,பழனி ஆண்டவர் நகர் சித்தி விநாயகர் கோவில், பி.வி கோவில் வீதி ,கன்னிகா பரமேஸ்வரி கோவில் உள்ளிட்ட கோவில்களில் நவராத்திரி முதல் நாள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு பொங்கல், சுண்டல் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது .மேலும் பல வீடுகளில் கொழு அமைத்து பக்தர்கள் வழிபாடு செய்து நவராத்திரியைகொண்டாடி வருகின்றனர்.

Tags:    

Similar News