உள்ளூர் செய்திகள்

வியாபாரிகளிடம் அருள் எம்.எல்.ஏ. பேச்சு வார்த்தை நடத்திய காட்சி.

சூரமங்கலம் உழவர் சந்தை வியாபாரிகள் தர்ணா போராட்டம்

Published On 2022-07-17 08:36 GMT   |   Update On 2022-07-17 08:36 GMT
  • வெளி வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கியதால் சூரமங்கலம் உழவர் சந்தை வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
  • இந்த போராட்டம் காரணமாக இன்று காலை காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் காய்கறி கடைகள் இல்லாததால் ஏமாற்றுத்துடன் சென்றனர்.

சேலம்:

சேலம் ஜங்ஷன் சூரமங்கலம் உழவர் சந்தையில் 300 கடைகள் உள்ளது. இங்கு சுழற்சி முறையில் கடைகள் வைத்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று வெளி வியாபாரிகள் 4 பேருக்கு கடை வைக்க அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து இன்று காலை உழவர் சந்தையில் கடைகள் வைக்காமல் புறக்கணித்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சூரமங்கலம் போலீசார் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த போராட்டம் காரணமாக இன்று காலை காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் காய்கறி கடைகள் இல்லாததால் ஏமாற்றுத்துடன் சென்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும் போது:- இங்கு நாங்கள் கடந்த 20 ஆண்டு களாக காய்கறிகள் விற்பனை செய்து வருகிறோம். நாங்கள் கடைகளுக்கு அடையாள அட்டை பதிவு செய்தால் ஒரு வருடம் காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் ஒரே நாளில் வெளி வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்கி உடனடியாக அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கடைகள் வைத்துவிட்டு எங்களுக்கு சுழற்சி முறையில் கடைகள் ஒதுக்க மாமூல் கேட்டு மிரட்டுகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வேண்டும். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து அருள் எம். எல்.ஏ அங்கு சென்று வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Tags:    

Similar News