உள்ளூர் செய்திகள்

எம்.எஸ்.ஷா இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது எடுத்த படம்.

மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு சொல்லவில்லை-எம்.எஸ்.ஷா பேட்டி

Published On 2022-07-22 08:33 GMT   |   Update On 2022-07-22 08:33 GMT
  • மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு சொல்லவில்லை என பா.ஜ.க. பொருளாதார பிரிவு தலைவர் கூறியுள்ளார்.
  • மத்திய அரசின் திட்டங்கள் லஞ்சம் இல்லாமல் பொது மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது.

மதுரை

தமிழ்நாடு பா.ஜனதா பொருளாதாரப் பிரிவின் மாநிலத்தலைவர் எம்.எஸ்.ஷா இன்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

2024-ம் ஆண்டு நாடா ளுமன்ற தேர்தலுடன் தமிழகத்துக்கு சட்டசபை தேர்தல் நடக்கும். முதல்வர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகள், திட்டங்களை செயல்படுத்தவில்லை. எனவே தமிழகம் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கி உள்ளது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட, தமிழகத்திற்கு மத்திய அரசு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. பிரதமர் மோடி கடந்த 8 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

மத்திய அரசின் திட்டங்கள் லஞ்சம் இல்லாமல் பொது மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த சொல்லவில்லை. மின் கட்டணத்தை மாற்றியமைக்க மட்டுமே கூறியது. ஒவ்வொரு மாநி லங்களின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் எந்த ஒரு பிரதமரும் செய்ய முடியாத சாதனைகளை- பிரதமர் மோடி செய்து வருகிறார். அத்தியாவசிய பொருட்களுக்கு மத்திய அரசு வரியை குறைத்து உள்ளது ஆனால் மாநில அரசு வரியை குறைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்டத்தலைவர் டாக்டர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News