உள்ளூர் செய்திகள்

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினரான முன்னாள் முதல்வர் நவராஜ் பரிசுக்கோப்பைகளை வழங்கினார்.

விளையாட்டு விழா

Published On 2022-06-17 09:22 GMT   |   Update On 2022-06-17 09:22 GMT
  • திருமங்கலம் அருகே அன்னை பாத்திமா கல்லூரி விளையாட்டு விழா நடந்தது.
  • கல்லூரி தாளாார் எம்.எஸ்.ஷா,பொருளாளர் ஷகிலா ஷா ஆகியோரது வழிகாட்டுதலின்படி நடந்தது.

மதுரை

திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி தாளாார் எம்.எஸ்.ஷா,பொருளாளர் ஷகிலா ஷா ஆகியோரது வழிகாட்டுதலின்படி 29-வது விளையாட்டு விழா நடந்தது. இயக்குநர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். முதல்வர் நயாஸ் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் முனியாண்டி வாழ்த்துரை வழங்கினார்.

முன்னாள் முதல்வர் நவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில், மாணவ-மாணவிகள் கல்விக்கு மட்டுமல்ல, விளையாட்டுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும். நூலகத்தை பயன்படுத்தி அதிகமான தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. கல்லூரி தாளாளரின் மகள் சகானா பின்ஷா நினைவாக கல்வியாண்டில் முதல் மதிப்பெண் பெற்ற 3-ம் ஆண்டு தடயவியல் துறை மாணவர் சேவியோன் சாகீருக்கு 4 கிராம் தங்க நாணயமும், 3-ம் ஆண்டு தொழில் நுட்பத்துறை மாணவி ஷோஸ்பின் சரோவிற்கு 2கிராம் தங்கநாணயமும் வழங்கப்பட்டது.

விடுதி அறை தூய்மை, நூலக பயன்பாடு, 100 சதவீத வருகைப்பதிவு பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்களும் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டன. சிறந்த பேராசிரியர்களுக்கும், சிறப்பாக பணி புரிந்த ஆசிரியர் அல்லாதவர்களுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை தட்டிச்சென்ற "புளு" குழுவினருக்கு "ஒட்டுமொத்த சாம்பியன்" கோப்பை வழங்கப்பட்டது.விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்துறை தலைவர் நிர்மலாதேவி நன்றி கூறினார். ஆங்கிலத்துறை தலைவர் ராஜ்குமார், கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் கார்த்திகா ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சிகளை உடற்கல்வி இயக்குநர் நாராயணபிரபு ஒருங்கிணைத்தார்.

கேம்பஸ் மேலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News