உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வலியுறுத்தி அஞ்சல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

Published On 2022-08-06 09:38 GMT   |   Update On 2022-08-06 09:38 GMT
  • ஊர்வலத்திற்கு நெல்லை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவாஜி கணேசன் தலைமை தாங்கினார்.
  • வருகிற 13,14,15-ந் தேதிகளில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியேற்றுமாறு மத்திய அரசு வலியுறுத்தியது.

நெல்லை:

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை அமுத பெருவிழாவாக கொண்டா டப்பட்டு வருகிறது.

இதையொட்டி அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுத்தி யுள்ளது.

இதுதொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அஞ்சல் துறை சார்பில் பாளையில் இன்று விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

நெல்லை கோட்ட முதுநிலை கண்காணிப் பாளர் சிவாஜி கணேசன் தலைமை தாங்கினார். ஊர்வலமானது பாளை தலைமை தபால் நிலைய த்தில் தொடங்கி பெருமாள் கீழரதவீதி தெற்கு பஜார் வழியாக தபால் நிலையத்தை அடைந்தது. அப்போது முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சிவாஜி கணேசன் கூறியதாவது:-

சுதந்திர தின அமுதம் பெருவிழாவை முன்னிட்டு வருகிற 13,14,15-ந் தேதிகளில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியேற்றுமாறு மத்திய அரசு வலியுறுத்தியது.

அதன்படி அனைவரும் வீடுகளில் தேசியகொடி ஏற்றி தேசிய உணர்வை வெளிப்படுத்த வேண்டும். அதனை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு தபால் நிலையத்திலும் 30 இன்ச் நீளமும், 20 இன்ச் உயரமும் கொண்ட துணியால் செய்யப்பட்ட தேசிய கொடி ரூ.25க்கு விற்கப்படுகிறது. அதனை பொதுமக்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ வாங்கி பயன்பெறலாம்.

நிகழ்ச்சியில் உதவி கோட்ட கண்காணிப்பாளர்கள் தீர்த்தாரப்பன், ஹேமாவதி, பாளை அஞ்சல்அதிகாரி விக்டோரியா, மக்கள் தொடர்பு அலுவலர்கள் கனகசபாபதி, அண்ணா மலை மற்றும் திரளான அஞ்சல்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News