உள்ளூர் செய்திகள்
முகாமில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

உடன்குடி சீர்காட்சியில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

Published On 2022-08-13 09:50 GMT   |   Update On 2022-08-13 09:50 GMT
  • மூலிகைச்செடிகள் வளர்ப்பு அவற்றின் மருத்துவகுறிப்புகள் மற்றும் பல்வேறு விவசாய பயிர்களை பயிரிடுவதுகுறித்து முழுமையாக பயிற்சி கொடுக்கப்பட்டது.
  • வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடசுப்பிரமணியன் துறைசார்ந்த திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

உடன்குடி:

உடன்குடி வட்டாரம் வேளாண்மை உழவர்நலத்துறை சார்பில் மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள்பயிற்சி முகாம் சீர்காட்சியில் வைத்து நடைபெற்றது. கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடந்த இம்முகாமில் மூலிகைச்செடிகள் வளர்ப்பு முறைகள் குறித்து விளக்கப்பட்டது. பஞ்சாயத்து தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார்.

மூலிகைச்செடிகள் வளர்ப்பு அவற்றின் மருத்துவகுறிப்புகள் மற்றும் பல்வேறு விவசாய பயிர்களை பயிரிடுவதுகுறித்து முழுமையாக பயிற்சி கொடுக்கப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடசுப்பிரமணியன் துறைசார்ந்த திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். உடன்குடி தோட்டக்கலை அலுவலர்ஆனந்தன் தென்னையில் ஊடுபயிர் வளர்ப்பதற்கான மானியங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

வனத்துறை ஆனந்த் பசுமை தமிழ்நாடு இயக்கம் குறித்து விளக்கி பேசினார். உதவி வேளாண்மை அலுவலர் லெட்சுமி பனைத்தொழில் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். இறுதியில் உதவி வேளாண்மை அலுவலர் வினோபா நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை வட்டாரதொழில்நுட்ப மேலாளர் ருக்மணி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் வெள்ளத்துரை, சபிதாஸ்ரீ ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News