உள்ளூர் செய்திகள்
பாதயாத்திரையில் கலந்து கொண்ட காங்கிரசார்.

கடையநல்லூரில் காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரை

Published On 2022-08-11 09:13 GMT   |   Update On 2022-08-11 09:13 GMT
  • பாதயாத்திரையை மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
  • பாதயாத்திரை கடையநல்லூர் மணிக்கூண்டு முன்பு துவங்கி பாரதியார் தெரு, கிருஷ்ணாபுரம், முத்துக் கிருஷ்ணாபுரம், பஜார் வழியாக மீண்டும் மணிக்கண்டில் நிறைவடைந்தது.

கடையநல்லூர்:

கடையநல்லூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டும், விலைவாசி உயர்வை கண்டித்து பொதுமக்களிடம் விளக்கும் விதமாக பாதயாத்திரையை மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் ஹிதாயத் துல்லா, மாநில பொதுக்குழு உறுப்பினர் சீவநல்லூர் சட்டநாதன், மாநில பேச்சாளர் பால்துரை, இடைகால் சிவராமகிருஷ்ணன், சண்முகவேலு, யூசுப், மஸ்தான், டாக்டர் சங்கரகுமார், நகர தலைவர் சமுத்திரம், வக்கீல் எஸ்.ஆர்.ரமேஷ், சுரேஷ், தேவேந்திரன், பிரபாகரன், கணேசன், பாக்கியராஜ், திருவெற்றியூர் கதிரவன், மாரிமுத்து, கரடிகுளம் அண்ணாமலை, திருமலை யப்பன், செல்ல பாண்டியன், மாடசாமி, ரவி, குருநாதன், செந்தூர்பாண்டியன், சோனா, அப்துல் ஹமீது, சேகு உதுமான், தென்காசி நகர பொருளாளர் ஈஸ்வரன், மகளிரணி சேர்மக்கனி, தங்கம், புஷ்பா உட்பட பலர் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு பாதயாத்திரை சென்றனர்.

சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.

பாதயாத்திரை கடையநல்லூர் மணிக்கூண்டு முன்பு துவங்கி பாரதியார் தெரு, கிருஷ்ணாபுரம், முத்துக் கிருஷ்ணாபுரம், பஜார் வழியாக மீண்டும் மணிக்கண்டில் நிறைவடைந்தது.

Tags:    

Similar News