உள்ளூர் செய்திகள்

சோழர் அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

சோழர் அருங்காட்சியக கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்- அமைச்சர் தங்கம்தென்னரசு

Published On 2023-08-05 10:11 GMT   |   Update On 2023-08-05 10:11 GMT
  • இந்திய வரலாற்றில் சோழர்களின் காலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • தற்போது நிரந்தரமாக இந்த அருங்காட்சியகம் தஞ்சையில் அமைய உள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை பெரியகோவில் மேம்பாலம் அருகே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தை கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் தமிழ்நாடு சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் மணிவாசன், அருங்காட்சியக ஆணையர் அரவிந்த் ஆகியோர் முன்னிலையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

இந்திய வரலாற்றில் சோழர்களின் காலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தஞ்சை பெரியகோவிலை கட்டி மாமன்னன் ராசராச சோழன், கங்கைகொண்ட சோழபுரம் கட்டிய ராஜேந்திர சோழன் என பிற்கால சோழர்களின் பங்களிப்பு என தமிழகத்தில் நிலை நாட்டிய பெருமை உண்டு. சோழர்களின் போர் வெற்றி, கோவில் பணிகள், சமுதாய பணிகள், கலைத்திறன் என எல்லாவற்றையும் விளக்கக்கூடிய வகையில் அருங்காட்சியகம் அமைய உள்ளது.ஏற்கனவே பெரியகோவில் ஆயிரம் ஆண்டு விழாவின்போது சோழர்களின் பெருமையை விளக்கும் விதமாக மிகப்பெரிய கண்காட்சி நடத்தப்பட்டது. அது ஒரு குறிப்பிட்ட காலம் தான் நடைபெற்றது. தற்போது நிரந்தரமாக இந்த அருங்காட்சியகம் தஞ்சையில் அமைய உள்ளது. பெரியகோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எளிதாக அருங்காட்சி யகத்திற்கு வந்து பார்ப்பதற்கு சிறந்த இடமாக அமைந்துள்ளது. விரைவில் முதல்-அமைச்சரின் ஒப்புதலின்பேரில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், தஞ்சை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் (பொறுப்பு) சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News