தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வென்று மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும்- ஜி.கே.வாசன்

Published On 2024-05-26 07:30 GMT   |   Update On 2024-05-26 07:30 GMT
  • கோடை மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு உள்ளிட்ட மானாவாரி பயிர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
  • கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சமீபத்தில் பெய்த கோடை மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு உள்ளிட்ட மானாவாரி பயிர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கர்நாடகா அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தர மறுக்கிறது. நமக்குரிய தண்ணீரை விரைவாக கிடைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News