தமிழ்நாடு செய்திகள்
'மதுர குலுங்க குலுங்க' - 2026 மதுரை சித்திரை திருவிழா அட்டவணை வெளியானது!
- கள்ளழகர் வைகையில் இறங்கும் விழா மே 1-ஆம் தேதி நடைபெறும்
- ஏப்ரல் 28 ஆம் தேதி மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது
தமிழ்நாட்டின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மதுரை சித்திரை திருவிழா குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 கோலாகலமாக கொண்டாடப்படும் இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் இந்தாண்டுக்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஏப்ரல் 19-ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றமும், ஏப்ரல் 26-இல் பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது. ஏப்ரல் 28-இல் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 29-இல் திருத்தேரோட்டமும் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மே 1, 2026 அன்று நடைபெற உள்ளது.