உள்ளூர் செய்திகள்
மீனாட்சி அம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவ விழா.

வைகாசி வசந்த உற்சவ விழா

Published On 2022-05-17 12:18 GMT   |   Update On 2022-05-17 12:18 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவ விழா அடுத்த மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது.
மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடந்தோறும் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். கடந்த மாதம் உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா நடந்தது.

மீனாட்சி அம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவ விழா வருகிற 3-ந் தேதி (ஜூன்) தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின்போது தினமும் மாலை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பாடாகி புது மண்டபம் சென்று பின்னர் 4 சித்திரை வீதிகளில் வலம் வருவார்.

விழாவின் நிறைவு நாளான 12-ந் தேதி காலையில் சுந்தரேசுவரர்-மீனாட்சி புது மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அன்றைய நாள் முழுவதும் அங்கு இருக்கும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும். மாலையில் மீண்டும் சன்னதிக்கு திரும்புகிறார்கள்.

வைகாசி வசந்த உற்சவம் திருவிழாவின்போது உபய தங்கரதம், உபயதிருக்கல்யாணம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறாது.

இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவிலில் நேற்று முதல் திருஞானசம்பந்தர் திருவிழா நடந்து வருகிறது. நாளை (18-ந் தேதி) திருஞானசம்பந்தர் திருநட்சத்திர தினத்தில் தங்க பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தொ டர்ந்து 63 நாயன் மார்களும் சப்பரத்தில் 4 ஆவணி மூல வீதியில் சுற்றி வருகிறார்கள். நாளை இரவு 8 மணிக்கு திருஞானசம்பந்தர் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருள்கிறார்.

Tags:    

Similar News