என் மலர்
நீங்கள் தேடியது "festival"
- நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் பங்குனி தேர்த் திருவிழா வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- ஏப்ரல் 1-ந் தேதி கருட வாகனம், 2-ந் தேதி சேச வாகனம், 3-ந் தேதி யானை வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெறுகின்றன.
நாமக்கல்:
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற நரசிம்மர் சுவாமி, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் தேர்த் திருவிழா நடைபெறும்.
அதன்படி நடப்பாண்டில் பங்குனி தேர்த் திருவிழா வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 30-ந் தேதி பல்லக்கு புறப்பாடு, சிம்ம வாகனத்தில் சாமி வீதியுலா, 31-ந் தேதி அனுமந்த வாகனம், ஏப்ரல் 1-ந் தேதி கருட வாகனம், 2-ந் தேதி சேச வாகனம், 3-ந் தேதி யானை வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெறுகின்றன.
4-ந் தேதி 10 மணிக்கு நரசிம்மர் நாமகிரி தாயார் திருக்கல்யாணம், 5-ந் தேதி குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடு, திருவேடு பரி உற்சவம் நடைபெறுகிறது. 6-ந் தேதி காலை 8.30 மணிக்கு நரசிம்மர் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது. பிற்பகல் 4.30 மணிக்கு அரங்கநாதர், ஆஞ்சநேயர் கோவில் தேரோட்டம் நடைபெறுகிறது.
7-ந் தேதி சப்த வர்ணம் கஜலட்சுமி வாகனம் வீதி உலா, 8-ந் தேதி வசந்த உற்சவம், 9-ந் தேதி விடையாட்சி உற்சவம், 10-ம் தேதி புஷ்ப பல்லக்கு, 11-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் மற்றும் 12-ந் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
- 22-ந்தேதி தங்க கருட வாகனத்தில் இரட்டை குடை சேவையும் நடக்கிறது.
- விழாவின் முக்கிய நிகழ்வான வெண்ணெய் தாழி உற்சவம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜ கோபாலசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பெருமாள் சன்னதிக்கு எதிரே உள்ள பெரிய கொடி மரத்தில் கருட பகவான் உருவம் பொறித்த கொடியை வேத மந்திரங்கள் முழங்க பட்டாச்சாரியார்கள் ஏற்றினர். அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த ராஜகோபால–சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ., மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் டி.மனோகரன், கோவில் நிர்வாக அதிகாரி மாதவன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி வருகிற 20-ந் தேதி தங்க சூரிய பிரபை விழாவும், 22-ந்தேதி தங்க கருட வாகனத்தில் இரட்டை குடை சேவையும் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான வெண்ணெய் தாழி உற்சவம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது. அன்று காலை நவநீத சேபையில் ராஜகோபாலன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
இரவில் தங்க குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் சாமி காட்சி தருகிறார். தொடர்ந்து வருகிற 27-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
- நாமக்கல் வடக்கு நல்லி பாளையம் அரசு மேல்நி லைப்பள்ளியில் கடந்த 28-ந் தேதி முதல் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.
- புத்தகத் திருவிழா இன்று டன் நிறைவு பெறுவ தாக இருந்தது. எனினும் புத்தக ஆர்வலர்கள், பொது மக்களின் கோரிக்கையினை ஏற்று, மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்ப தாவது:-
நாமக்கல் வடக்கு நல்லி பாளையம் அரசு மேல்நி லைப்பள்ளியில் கடந்த 28-ந் தேதி முதல் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத் திருவிழா வில் 80 அரங்குகள், சொற்பொழிவு கள், பட்டி மன்றம், குழந்தை களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், உணவுத் திரு விழா, கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம், வண்ண மீன்கள் காட்சியகம், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண் காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நடைபெற்று வருகிறது.
புத்தகத் திருவிழா இன்று டன் நிறைவு பெறுவ தாக இருந்தது. எனினும் புத்தக ஆர்வலர்கள், பொது மக்களின் கோரிக்கையினை ஏற்று, மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது.
இதையடுத்து, நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (12-ந் தேதி) இந்த புத்தகத் திரு விழா நடை பெறும். எனவே பொது மக்கள், மாணவ, மாணவிகள், எழுத்தாளர்கள், கல்வியா ளர்கள் என அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்ப டுத்தி தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிப் படித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
- அன்னதானம் வழங்கப்பட்டது
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியில் ஊஞ்சல் பொன்னியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு நேற்று மாசி மாத திருவிழா நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு நெய், பால், தயிர், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்பு அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு அனைத்து வீதிகளிலும் ஊர்வலமாகச் சென்றது. ஊர்வலத்தின் போது கோலாட்டம், புலி ஆட்டம், சுருள் விளையாட்டுகள் மற்றும் நையாண்டி, பொய்க்கால் குதிரை போன்ற நாட்டுப்புற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பக்தர்களும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செய்தனர்.
விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- அரங்கனூர் எரமுடி அய்யனார் கோவில் அருகில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் புதுவைப்பதியில் நடந்தது.
- புதுக்குப்பம் கடற்கரையில் இருந்து கடல் பதம் எடுத்து வரப்பட்டது.
புதுச்சேரி:
அய்யா வைகுண்டரின் 191-வது அவதார தின விழா புதுவை மாநிலத்தில் முதல்முறையாக பாகூரை அடுத்த அரங்கனூர் எரமுடி அய்யனார் கோவில் அருகில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் புதுவைப்பதியில் நடந்தது.
முன்னதாக காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பால் வைத்தல், அதைத்தொடர்ந்து புதுக்குப்பம் கடற்கரையில் இருந்து கடல் பதம் எடுத்து வரப்பட்டது. 8 மணிக்கு உகப்படிப்பு, பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பகல் 1 மணிக்கு அன்னதர்மம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பால் வைத்தல், மாலை 5 மணிக்கு உகப்படிப்பு, 5.30 மணிக்கு இனிமம் (பிரசாதம்) வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை புதுவை, கடலூர் மற்றும் திண் டிவனம் பகுதி அய்யாவழி அன்புகொடி மக்கள் செய்து இருந்தனர்.
- திருமங்கலம் அருகே முனியாண்டி கோவில் திருவிழா நடந்தது.
- மாலையில் நிலைமாலை பரிவாரத்துடன் மலர்தட்டு ஏந்தி பெண்கள் ஊர்வலமாக வந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி கடைசி வெள்ளிக்கிழமை அன்று அன்னதான பூஜை விழா நடைபெறுவது வழக்கம். இதையெட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். மாலையில் நிலைமாலை பரிவாரத்துடன் மலர்தட்டு ஏந்தி பெண்கள் ஊர்வலமாக வந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
இதில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ராமகிருஷ்ணன் திரளி ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா ராஜாராம் ஊர் நாட்டாமை அழகர்சாமி விழா கமிட்டி நிர்வாகி பழனி முருகன் மற்றும் நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் மகளிர் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
- கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மக திருவிழா நடைபெற்றது
- பக்தர்கள் சுவாமி அம்பாளுக்கு மேளதாளத்துடன் கல்யாணத்திற்கு சீர் வரிசைகள் கொண்டுவந்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாதம் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 11 நாள் விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்று, தொடர்ந்து மூலவர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் சுவாமி அம்பாளுக்கு மேளதாளத்துடன் கல்யாணத்திற்கு சீர் வரிசைகள் கொண்டுவந்தனர்.
இதில் மலர் அலங்காரத்தில் வீற்றிருந்த சுவாமி அம்பாளுக்கு அக்கினி வார்த்து வேத மந்திரங்கள் முழுங்க திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து சுவாமி அம்பாள் கோவில் உள் பிரகாரத்தில் வீதியுலா நடைபெற்றது. இந்த திருக்கல்யாண உற்சவத்தை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மாபெரும் புத்தகத் திருவிழா, நல்லிபாளையத்தில் உள்ள, நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.
- நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து, கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில், முதன் முறையாக, தமிழ்நாடு அரசு சார்பில், மாபெரும் புத்தகத் திருவிழா, நல்லிபாளையத்தில் உள்ள, நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து, கண்காட்சியை தொடங்கி வைத்தார். டி.ஆர்.ஓ. மணிமேகலை வரவேற்றார். எம்.பி., சின்ராஜ், எம்.எல்.ஏ., ராமலிங்கம், நகராட்சி தலைவர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் பேசியதாவது:-
தற்போதைய சூழ்நிலையில், புத்தகம் வாசிப்பது குறைந்துள்ளது. இளைஞர்கள் வாட்ஸ் ஆப், ட்விட்டர் உள்ளிட்ட சோசியல் யாக்களில் காட்டும் ஆர்வத்தை, புத்தகம் வாசிப்பதில் காட்டுவதில்லை. புத்தகம் வாசிப்பதன் மூலம், தன்னம்பிக்கை பெறமுடியும். அந்த தன்னம்பிக்கை இருந்தால்தான், நாளைய உலகில் போராட முடியும். முன்னுக்கு வரமுடியும்.
பொதுமக்கள் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்து, புத்தக அரங்கை காண்பித்தால் அவர்களுக்கு புத்தகம் வாசிப்பதில் ஈடுபாடு வரும். அதன் மூலம், பத்து பேர், 100 பேர் படிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்தினால், நாளைய சமூகம் நன்றாக இருக்கும். இது குறிப்பிட்ட தனிநபர் ஆர்வம் கிடையாது. குழந்தைகள் படித்தால், நாளைக்கு இந்த சமூகத்துக்கு அவர்கள் மூலம் பயன்பாடு கிடைக்கும்.
நாடு முன்னேறி இருக்கிறது. நமக்கு என்று கலாச்சாரம், பண்பாடு இருக்கிறது. சிலப்பதிகாரம், திருக்குறள், சங்க இலக்கியங்கள் இருப்பது நமக்கு பெருமைதான். அதனால், குழந்தைகளை அழைத்து வந்து படிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்தினால், நாளைய சமூகம் நன்றாக இருக்கும். அதன் மூலம் ஏற்படுகின்ற சமூக மாற்றங்களும் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புத்தக திருவிழாவில், 80 அரங்குகள், 20 ஆளுமைகளின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், உணவுத் திருவிழா, கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம், வண்ண மீன்கள் காட்சியகம், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அமைந்துள்ளன. வரும், 10-ந் தேதி வரை நடக்கும் இந்த புத்தக திருவிழாவில், தினமும், காலை 11 மணி முதல், மதியம் 2 மணி வரை, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான கட்டுரை, பாட்டு, கவிதை, படம் பார்த்து கதை சொல்லுதல், வினாடி வினா, மாறுவேடம், நாடகம் மற்றும் பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கிறது.
மேலும், மாலை, 3 மணி முதல், 5 மணி வரை, பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து, மாலை 6 மணி முதல், இரவு 9 மணி வரை20 பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், பட்டி–மன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சி–கள் நடைபெற உள்ளது.
- பாரம்பரிய முறைப்படி முப்பூஜை திருவிழா 3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விமரிசையாக நடைபெற்றது.
- அக்ரஹாரம் குடியிருப்பு பகுதியில் இருந்து கோயிலுக்கு ஊர்வலமாக சென்ற 100க்கும் மேற்பட்ட பெண்கள் புதிய மூங்கில் கூடைகளில் பூஜை பொருட்கள் மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை வைத்து தலையில் சுமந்து கொண்டு பம்பை உறுமி மேளத்திற்கு ஏற்ப சாமியாடியபடிச் சென்றனர்.
வாழப்பாடி:
வாழப்பாடி அக்ரஹாரம், புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழப்பாடி காமராஜ்நகரில் பெரியாற்றின் கரையிலுள்ள பெரியாண்டிச்சி அம்மன் குல தெய்வமாக விளங்கி வருகிறது.
இக்கோவிலில் பாரம்பரிய முறைப்படி முப்பூஜை திருவிழா 3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விமரிசையாக நடைபெற்றது. அக்ரஹாரம் குடியிருப்பு பகுதியில் இருந்து கோயிலுக்கு ஊர்வலமாக சென்ற 100க்கும் மேற்பட்ட பெண்கள் புதிய மூங்கில் கூடைகளில் பூஜை பொருட்கள் மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை வைத்து தலையில் சுமந்து கொண்டு பம்பை உறுமி மேளத்திற்கு ஏற்ப சாமியாடியபடிச் சென்றனர்.
இந்நிகழ்வு, காண்போரை பரவசமூட்டும் வகையில் அமைந்தது. பாரம்பரிய முறைப்படி முன்னோர்கள் வழியில் குல தெய்வமான பெரியாண்டிச்சி அம்மனுக்கு, ஆடு,கோழி, பன்றி ஆகியவற்றை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இளம் தம்பதிகள் குழந்தைகளுக்கு மொட்டை போட்டு, காது குத்தி, உறவினர்களை அழைத்து விருந்து வைத்து உபசரித்தனர்.
நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்திலுள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலுக்கு, நேற்று முன்தினம் திரண்டு சென்ற வாழப்பாடி பகுதி மக்கள், முப்பூஜை வழிபாடு நடத்தியதும். பெரியாண்டிச்சி அம்மன் கோயிலிலுள்ள முன்னடியான் என அழைக்கப்படும் கருப்பனார் சுவாமிக்கு மதுபானம் படையலில் வைத்து வழிபாடு நடத்தியதும் குறிப்பிடதக்கதாகும்.
இதுகுறித்து, வாழப்பாடி புதுப்பாளையம் சரவணன், அக்ரஹாரம் அங்கமுத்து, கலைச்செல்வி ஆகியோர் கூறியதாவது:
பணி நிமித்தமாக பல்வேறு பகுதியில் வசித்து வரும் உறவினர்களை, ஒரே இடத்தில் சந்தித்து உறவை மேம்படுத்திக் கொள்வதற்காக, 3 ஆண்டுக்கு ஒருமுறை ஒட்டு மொத்த பங்காளிகளின் குடும்பங்களும் ஒன்று சேர்ந்து, குலதெய்வமான பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் முப்பூஜை திருவிழா கொண்டாடுவதை முன்னோர்கள் வழியில் தொடர்ந்து வருகிறோம்.
100 குடும்பங்களை சேர்ந்த உறவுகள் ஒன்றிணைந்து குல தெய்வ முப்பூஜை வழிபாடு நடத்தியது பெரும் மகிழ்ச்சி–யை ஏற்படுத்தியதோடு, உறவை பலப்படுத்தி ஒற்று–மையை அதிகரித்துள்ளது' என்றனர்.
- பத்ரகாளியம்மன் கோவில் தீ மிதி திருவிழா நடைபெற்றது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதி திருவிழாவில் பங்கேற்றதோடு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே கவுல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான தீ மீதி திருவிழா கோவில் வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில், விரதமிருந்த பக்தர்கள் கவுல்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தி பரவசத்துடன் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சில பக்தர்கள் தங்களது குழந்தையை சுமந்து கொண்டு தீ மிதித்தனர்.
இதில் கவுல்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதி திருவிழாவில் பங்கேற்றதோடு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) மதியம் கோவிலில் கிடா வெட்டும், இரவில் விநாயகர் கோவிலில் இருந்து கோவிலுக்கு பக்தர்கள் அலகு குத்தியும், மா விளக்கு எடுத்தும் வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை ஒரு வாரத்திற்கு கொண்டாடப்பட உள்ளது.
- நஞ்சப்பா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் வினீத் தொடங்கி வைக்கிறார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருப்பூர் மாவட்டத்தில் ஆட்சிமொழி சட்ட வாரம் வரும் 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை ஒரு வாரத்திற்கு கொண்டாடப்பட உள்ளது. ஆட்சிமொழி சட்ட வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் நடைபெறும். இந்த ஆட்சிமொழி சட்ட வார விழாவை வரும் 9-ந் தேதி திருப்பூர் நஞ்சப்பா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.30 மணிக்கு கலெக்டர் வினீத் தொடங்கி வைக்கிறார். இதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது. இதேபோல் 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை ஒரு வாரத்திற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.