என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
காளியம்மன் கோவிலில் பச்சை-பவள காளி விழா
மயிலாடுதுறை அருகே உள்ள தோப்பிடையாள் காளியம்மன் கோவிலில் பச்சை-பவள காளி விழா நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, மாமாகுடி கிராமத்தில் கோமளாம்பிகை என்னும் இலுப்பை தோப்படியாள் ஸ்ரீ காளியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் நடைபெறும் காளியாட்ட உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் காளி ஆட்ட உற்சவம் நேற்று நடைபெற்றது.
90வது ஆண்டாக நடைபெறும் உற்சவத்தை முன்னிட்டு கிராமமக்கள் காப்புகட்டி பால்குடம் எடுத்து மாரியம்மன் காளியம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்ய ப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மாமாகுடி பிள்ளையார்கோவில் கோவிலில் இருந்து அலகுகாவடி 16அடிநீல அலகு குத்தியும் பக்தர்கள் வீதியுலாவாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பெண்கள் மாவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வாக பச்சைக்காளி பவளக்காளி திருஉருவத்திற்கு மாரிய ம்மன் கோவிலில் படையலிட்டு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
காளியம்மன் கரகம் புறப்பாடு செய்யப்பட்டு காளி ஆட்ட உற்சவம் மேளதாள வாத்தியஙகள் முழங்க தொடங்கியது. பச்சைக்காளி பவள க்காளி ஆகிய இரு அம்மன்களுக்கும் பொது மக்கள் வேண்டுதலை நிறைவேற்றகோரி மாலை அணிவித்து வணங்கினர்.
தொடர்ந்து 1 மணிநேரம் கண்கவர் வாணவேடிக்கை விண்ணை அதிரச்செய்ய பச்சைக்காளி பவளக்காளி ஆக்ரோசத்துடன் திருநடனம் புரிந்தது பக்தர்களை பரவசப்படுத்தியது. 3 மணிநேரம் காளியாட்ம் நடைபெற்றது.
பின்னர் காளி ஆட்ட வீதியுலா தொடங்கியது. விடியவிடிய வீதியுலா சென்று இரவு காளிகள் கோவிலை வந்தடையும் காளி ஆட்டத்தை பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். காளி ஆட்டங்களைதங்கள் செல்போனில் படம்பிடித்தனர்.
பொறையார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story






